Claim: நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் – பிரசாந்த் கிஷோர்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.
“பலரும் மதிப்பிடுகிறார்கள் மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்று, இது பிஜேபி ஏற்படுத்தும் வெற்று பிம்பமே!! அதற்காக நாளையோ அடுத்த இரண்டு ஆண்டுகளிலோ அவர்கள் தேர்தலில் நோட்டாவை விட அதிக வாக்குகள் பெறுவார்கள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் அடுத்த 3 முதல் 5 அல்லது 10 ஆண்டுகளில், தமிழகத்தில் நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்குவதற்கு பாஜக சாத்தியம் உள்ளது – பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?
Fact Check/Verification
நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் சாணக்யா டிவி பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “தமிழக பாஜக – பிரசாந்த் கிஷோர் கணிப்பு பலரும் மதிப்பிடுவதைவிட மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் பாஜக இருக்கும். அதற்காக நாளையோ அடுத்த இரண்டு ஆண்டுகளிலோ அவர்கள் தேர்தல்களை வெல்வார்கள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் அடுத்த 3 முதல் 5 அல்லது 10 ஆண்டுகளில், தமிழக மக்களிடம் அதிகம் செல்வாக்கைப் பெற்று அதிக வாக்கு வங்கியை கொண்ட கட்சியாக பாஜகமாறும். – பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு” என்று நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதனை எடுத்தே வைரல் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.


மேலும், பிரசாந்த் கிஷோர் பேசியிருந்த வீடியோவை ஆராய்ந்தபோது அதில், தற்போது உடனே இல்லாவிட்டாலும் பாஜக ஒரு 3 முதல் 5 அல்லது 10 வருடங்களில் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்புள்ளது என்பதாகப் பேசியிருந்தார்.
Also Read: காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுகிறதா?
Conclusion
நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Facebook Post by chanakyaaonline, Dated on October 28, 2023
YouTube Video From, Shoma Chaudhury
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)