Claim: தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக.
Fact: வைரலாகும் பட்டியல் போலியானது என்று பாஜக தரப்பு தெளிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பட்டியல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இப்பட்டியலில் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், விஜயதாரணி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் வேட்பாளராக இருப்பதை காண முடிந்தது.

