தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என்று பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Fact Check/Verification
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பதவித் தரப்பட்டது.
அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இணைவதற்கு முன்பிலிருந்தே பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தார். தற்போது அவர் பாஜகவில் இணைந்தப்பின் அவர் குறித்துத் தவறானத் தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அண்மையில் திமுக-பாஜக கட்சிகளுக்கிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அதன் விளைவாக பாஜகவினர் கட்டுக் கட்டிக் கொண்டுப் போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தில் அண்ணாமலை அவர்கள் கூறாத விஷயத்தை கூறியதாக விமர்சனத்துக்கு ஆட்படுத்தப்பட்டார்
இதுக்குறித்து விரிவாக ஆராய்ந்து நியூஸ் செக்கர் சார்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: https://tamil.newschecker.in/fact-checks/did-annamalai-criticize-netizens/
அண்ணாமலை அவர்கள் அண்மையில் ஜூனியர் விகடனுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அப்பேட்டியில் தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியதாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
முதலில் ஜூனியர் விகடனின் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுக்குறித்த செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று தேடினோம். ஆனால் நமக்கு இதுத்தொடர்பாக எந்தப் பதிவுகளும் கிடைக்கவில்லை.
அண்ணாமலை அவர்கள் தரப்பில் இச்செய்திக் குறித்து ஏதாவது விளக்கம் தரப்பட்டதா என்பதை அறிய அவரது டிவிட்டர் பக்கத்தை ஆராய்ந்தபோது அண்ணாமலை அவர்கள் ஜூனியர் விகடனை டேக்(Tag) செய்து இரண்டு பதிவுகளைப் பதிவிட்டதைக் காண முடிந்தது.
முதல் பதிவில், பதவியை எதிர்பார்த்து யாரும் இங்கு வரவில்லை. சேவை செய்வதற்காக மட்டுமே வந்துள்ளோம். நான் இவ்வாறு கூறியதற்கு வீடியோ ஆதாரம் இருந்தால் அதைத் தாருங்கள். இல்லாவிடில், நீங்கள் மான நஷ்ட வழக்கைச் சந்திக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜூனியர் விகடன் தரப்பில் இச்செய்தியை நீக்கி விட்டனர். இதற்கு நன்றி கூறும் விதமாக அவரது இரண்டாவது பதிவு இருந்தது.
Conclusion
நமது விரிவான ஆய்வின் மூலம் தெளிவாகுவது என்னவென்றால்,
- பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என்று கருத்தைக் கூறவே இல்லை.
- ஜூனியர் விகடனில் இவ்வாறு அவர் கூறியதாக தவறாகப் பிரசுரித்து, பின்னர் அதை நீக்கியுள்ளனர்.
Result: False
Our Sources
Twitter Profile: https://twitter.com/itshridhar/status/1307596707845160960
Twitter Profile: https://twitter.com/mdibrahim3620/status/1308477577787404288
Annamalai IPS’s Twitter Profile:
- https://twitter.com/annamalai_k/status/1307670743031767040
- https://twitter.com/annamalai_k/status/1308309945025277952
Twitter Profile: https://twitter.com/kingofcbe/status/1307616148830248966
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)