முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு முதல்வர் அவரை தயவுசெய்து விடுதலை செய்யவேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

சென்னை ராயபுரம் பகுதியில் திமுக கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி அவரை அரை ஆடையுடன் தாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார்-ஐ சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், “அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அவரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு முதல்வர் தயவுசெய்து அவரை விடுதலை செய்ய வேண்டும். அவருக்காக அந்த சிறுபிள்ளை காத்திருக்கிறது” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
Fact Check/Verification
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு முதல்வர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டு, கதிர் நியூஸ் வெளியிட்டதாக வைரலாகிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அப்படி செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா என்று தேடினோம். ஆனால், அப்படி ஏதும் செய்தி வரவில்லை. மேலும், வைரலாகிய நியூஸ் கார்டு கேலியான வகையில் அமைந்திருந்தது. ஆனால், பலரும் அது உண்மையான செய்தி என்றே சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருவதையும் நம்மால் அறிய முடிந்தது.
எனவே, கதிர் நியூஸைச் சேர்ந்த பிரதீப்பிடம் குறிப்பிட்ட நியூஸ் கார்டு குறித்து கேட்டோம். அப்போது அவர், வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்று விளக்கமளித்தார்.
மேலும், இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தரப்பில் கேட்டபோது, அவர்களும் குறிப்பிட்ட செய்தி போலியாகப் பரப்பப்படுகிறது என்று விளக்கமளித்தனர்.
Conclusion
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு முதல்வர் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)