உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போது சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சார்பில் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டில் நாளை நடைபெற உள்ள நிலையில், “உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும். 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகவும் பின்னடைவை சந்திக்க உள்ளது. ஆளும் கட்சி உள்ளாட்சி தேர்தலில் பின்னடைவை சந்திப்பது இதுவே முதல்முறை என லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் கூறப்பட்டது” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முதல்வர் ஸ்டாலின் எழுதிய உளராமல் பேசுவது எப்படி என்கிற நூல் என்று பரவும் வதந்தி!
Fact Check/Verification
உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டில் எழுத்துப்பிழைகள் இருந்ததுடன், லயோலா கல்லூரி சமீபத்தில் கருத்துக்கணிப்புகள் எதனையும் வெளியிட்டதாக செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
எனவே, குறிப்பிட்ட நியூஸ் கார்டில் உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். ஆனால், அதில் சரியான முடிவு கிடைக்கவில்லை. தொடர்ந்து, முக்கியச் சொற்கள் மூலமாக தேடியபோது கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதியன்று பேராசிரியர் எஸ்.ராஜநாயகம் தலைமையில் மாணவர்கள் இணைந்து அன்றைய தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது நமக்கு உறுதியானது.
மேலும், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே பணி ஓய்வு பெற்று விட்டார் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து, இந்த வைரல் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி தரப்பில் கேட்டப்போது, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த வினோத் குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு போலியாக வடிவமைக்கப்பட்டது என்பதை நமக்கு உறுதி செய்தார்.
Conclusion
உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Thanthi tv
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)