Fact Check
இந்திய ராணுவத் தாக்குதலால் பாகிஸ்தானில் அணுக்கசிவு என்று பரவும் கடிதம் உண்மையா?

Claim
இந்திய ராணுவத் தாக்குதலால் பாகிஸ்தானில் அணுக்கசிவு
Fact
வைரலாகும் கடிதம் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
இந்திய ராணுவத் தாக்குதலால் பாகிஸ்தானில் அணுக்கசிவு என்று கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“ஹலோ பாகிஸ்தான் மக்களே அணுக்கசிவு ஏற்பட்டுள்ளது…. அதனால் நீங்கள் ஒன்னும் பயப்பட வேண்டாம் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுங்கள்….அருகில் இருப்போர் மெடிக்கல் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் பாகிஸ்தான் அரசு எவன் சொன்னா கேக்குறான்” என்று இந்த கடிதம் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
இந்திய ராணுவத் தாக்குதலால் பாகிஸ்தானில் அணுக்கசிவு என்று பரவும் கடிதம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் கடிதத்தை ஆராய்ந்ததில் அதில் பல்வேறு எழுத்துப்பிழைகள் இருப்பதைக் காண முடிந்தது.

எனவே, பாகிஸ்தான் தரப்பில் அவர்களுடைய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமான PNRA பக்கத்தில் ஆராய்ந்தபோது அப்படி எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.
எனவே, நியூஸ்செக்கர் சார்பில் Kamran Saqi என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த ராணுவப் பத்திரிக்கையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்தக் கடிதம் போலியானது என்று உறுதி செய்தார். மேலும், PAK-EPA நிர்வாக இயக்குநரான Nazia Zeb Ali என்பவரும் இந்தக் கடிதம் போலியானது என்று உறுதிப்படுத்தினார்.
Also Read: ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு சேதமடைந்ததாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
இந்திய ராணுவத் தாக்குதலால் பாகிஸ்தானில் அணுக்கசிவு என்று பாகிஸ்தானின் ரகசிய மற்றும் அவசர வெளியீடு என்பதாகப் பரவும் கடிதம் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Conversation with Kamran Saqi, senior defence journalist based out of Pakistan
Analysis of letter