Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட இஸ்லாமியர்களை அடித்து துவைத்த போலீசார்
வைரலாகும் செய்தி தவறானதாகும். அவர்கள் போபாலைச் சேர்ந்த தாதாக்கள் ஆவார்கள்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட இஸ்லாமியர்களை அடித்து துவைத்த போலீசார் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“போபாலில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட அமைதி மார்க்கத்தினர்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட இஸ்லாமியர்களை அடித்து துவைத்த போலீசார் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த மார்ச் 09, 2025 அன்று “Notorious Gangster Zubair Maulana, Three Aides Arrested In Joint Operation; Paraded Publicly In Bhopal” என்கிற தலைப்பில் Free Press Journal வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது.

மத்திய பிரதேசம் போபாலில் பிரபலமான தாதாவாக செயல்பட்டு வந்த சுபேர் மெளலானா மற்றும் மூன்று கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்ற காட்சி என்று இதுகுறித்து செய்திகளில் வெளியாகியிருந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்ந்தபோது 6 மாதங்களாக ஒளிந்திருந்த ரெளடியை காவல்துறையினர் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக Times of India வெளியிட்டிருந்த செய்தியும் நமக்குக் கிடைத்தது.

எனவே, குறிப்பிட்ட செய்தியே பாகிஸ்தான் ஜிந்தாபாத் கூறாத இஸ்லாமியர்களை அடித்து துவைத்த காவல்துறையினர் என்பதாக தவறான நோக்கில் பரப்பப்பட்டு வருகிறது என்பது உறுதியாகியது.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட இஸ்லாமியர்களை அடித்து துவைத்த போலீசார் என்று பரவும் வீடியோ செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report From, Free Press Journal, Dated May 09, 2025
Report From, TOI, Dated May 10, 2025
Ramkumar Kaliamurthy
May 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 20, 2025
Kushel Madhusoodan
May 15, 2025