Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பீகாரில் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்லாமியர்கள்
வைரலாகும் வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டு திரிபுராவில் எடுக்கப்பட்டதாகும்.
பீகாரில் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்லாமியர்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”பீகாரில் 10 ஜமாத்தை சேர்ந்த 1000 இஸ்லாமியர் மட்டும் கலந்து கொண்டு பிஜேபிக்காக செய்த பிரச்சாரம் தான் இது. ” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அமெரிக்க இஸ்லாமியர்கள் இந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று போராடினரா?
பீகாரில் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது இந்த வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைக் காண முடிந்தது.
திரிபுராவில் இஸ்லாமியர்கள் பிரச்சாரம் என்று பரவிய இந்த வீடியோ குறித்து மேலும் தேடியபோது கடந்த ஏப்ரல் 04, 2024 அன்று TIWN என்கிற திரிபுரா ஊடகத்தில் இந்த வீடியோ வெளியாகியிருந்தது. திரிபுரா மேற்கு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிப்லாப் குமார் தேவுக்கு ஆதரவாக அவர்கள் இந்த பேரணியில் ஈடுபட்டனர் என்று செய்தி வெளியாகியிருந்தது.
இதன்மூலம், இந்த வீடியோ பீகாரைச் சேர்ந்ததல்ல; திரிபுராவில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகிறது.
Also Read: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை விஜய் சந்தித்ததாக பரவும் பழைய படங்கள்!
பீகாரில் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ கடந்த வருடம் திரிபுராவில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By, TIWN, Dated April 04, 2024
Self Analysis
Ramkumar Kaliamurthy
November 20, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 19, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 17, 2025