Claim: வங்கதேசத்தில் துன்புறுத்தப்படும் இந்துக்கள்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு பீகாரில் எடுக்கப்பட்டதாகும்.
வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”Hindus at Bagaledesh. டேய் எவனாவது இது பொய்னு வந்தீங்க செருப்பு பிஞ்சிரும் எல்லாவத்துக்கும் ஒரு விலை கொடுத்தே ஆகணும்டா எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடுங்கடா பதில் குடுத்தே தீரணும்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது குறிப்பிட்ட வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு பீகாரில் எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

பீகார் ஹஜிப்பூரில் பூம்பூம் மாட்டுடன் சாதுக்கள் போன்று வந்து யாசித்த இஸ்லாமியர்கள் சிலரை பஜ்ரங்தள்-ஐச் சேர்ந்தவர்கள் அடித்து உதைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அச்செய்திகள் தற்போது வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதுகுறித்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

குறிப்பிட்ட வீடியோவே தற்போது வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்துப்படுவதாகப் பரவி வருகிறது.
Conclusion
வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகப் பரவும் வீடியோ பீகாரில் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from aajtak, Dated July 27, 2022
Twitter post from @TNNavbharat, July 26, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)