Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இஸ்லாமியப் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய நிதிஷ் குமாருக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் ஷாருக்கான்
வைரலாகும் வீடியோ போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
இஸ்லாமியப் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நடிகர் ஷாருக்கான் கண்டனம் தெரிவித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அரசு வேலை வழங்கும் திட்டத்தின் போது நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் மூடி இருந்த ஹிஜாப்பை இழுத்து அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தது ….. நீ ஒரு சாதாரண துணி என்று நினைத்து செய்தது ஒரு மதத்தையே அவமானப்படுத்துகிறது செயல் என்பது ஏழு கழுதை வயசாகியும் உனக்கு தெரியலையா….? செருப்படி பதிவு” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக வலைத்தளங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
இஸ்லாமியப் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய நிதிஷ் குமாருக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் ஷாருக்கான் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் ஷாருக்கானின் பாவனைகளுக்கும், பின்புல ஆடியோவிற்கும் இடையே இடைவெளி இருப்பதை நம்மால் காண முடிந்தது. மேலும், செய்திகளிலோ, ஷாருக்கானின் சமூக வலைத்தளப்பக்கங்களிலோ எந்த செய்தியும் இடம்பெறவில்லை.
எனவே, அந்த வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த மார்ச் 20, 2020 அன்று ஷாருக்கான் “We must all do our bit and support the officials doing so much for us. ” என்கிற தலைப்பில் கோவிட் கால பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிட்டு வெளியிட்டிருந்த வீடியோவும், தற்போதைய வைரல் வீடியோவும் ஒன்று என்பதை நம்மால் காண முடிந்தது.

கோவிட் தொற்று குறித்து அவர் பேசியிருந்த வீடியோவில் போலியாக நிதிஷ் குமாரின் செயலுக்கு அவர் கண்டனம் தெரிவித்து பேசியதாக ஆடியோவை உருவாக்கி இணைத்துள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: பிரியாணிக்காக திமுகவினர் அடிதடி; வைரலாகும் வீடியோ திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டதா?
இஸ்லாமியப் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய நிதிஷ் குமாருக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் ஷாருக்கான் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, Shah Rukh Khan, Dated March 20, 2020
Report From, NDTV, Dated March 20, 2020
Runjay Kumar
August 20, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 12, 2024
Vijayalakshmi Balasubramaniyan
July 23, 2024