மணவறையில் மணமகன் குட்கா மென்றதால் மணமகள் அவரை அடித்ததாக வீடியோ ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வைரலாகும் வீடியோவில் திருமண சடங்கின்போது வாயில் குட்காவை வைத்திருந்ததால் மணமகனையும், கூட இருந்த மணமகள் அடிப்பதாக உள்ளது. இதன்பின் மணமகன் கூடி இருக்கும் உறவினர்களுக்கிடையே குட்காவை துப்புகின்றார்.
இந்த நிகழ்வு குறித்து தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Fact Check/Verification
மணமகன் குட்கா மென்றதால் மணமகள் அவரை அடித்ததாக வைரலான வீடியோவின் பின்னணி குறித்து அறிய அவ்வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
இதில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உண்மையானது அல்ல, அது யூடியூப் வீடியோவுக்காக புனையப்பட்ட நிகழ்வு என்பதை நம்மால் அறிய முடிந்தது.

யூடியூபில் சந்தன் மிஷ்ரா என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி நகைச்சுவை வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவ்வீடியோவின் ஒரு பகுதியே தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி பொருளாக மாறியுள்ளது.
சந்தன் மிஷ்ரா யூடியூபில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிடும் கண்டெண்ட் கிரியேட்டர் ஆவார். இவரது யூடியூப் சேனலை ஏறக்குறைய 1.02 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர் வைரலாகும் வீடியோ போல் பல நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

Also Read: உஜ்ஜைனில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக கூடிய கூட்டமா இது?
Conclusion
மணவறையில் மணமகன் குட்கா மென்றதால் மணமகள் அவரை அடித்ததாக பரவும் உண்மையானது அல்ல, அது யூடியூப் வீடியோவுக்காக புனையப்பட்ட கதையாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)