ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkயூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது மனைவி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; என வைரலாகும் நியூஸ்கார்ட்

தற்சமயம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன். பாஜகவை சேர்ந்த இவர் தமிழக பாஜகவின் மாநிலபொது செயலாளராக இருந்த கே.டி.ராகவனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படியே தான் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அண்ணாமலை அவர்களோ இதை மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மதனும் அவரது தோழியான வெண்பாவும் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக கட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மதன்.

இந்நிலையில் ‘என் கணவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். வெண்பா என்ற பெண் என் கணவரை தவறாக வழி நடத்துகிறார்’ என்று மதனின் மனைவி குற்றம் சாட்டியதாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; என வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; என வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; என வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம்; வைரலாகும் படம் உண்மையானதா?

Fact Check/Verification

டியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது மனைவி கூறியதாக நியூஸ்கார்ட் வைரலானதை தொடர்ந்து இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் புதிய தலைமுறையில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.

இதற்கு அவர்,

“வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை.”

என்று விளக்கமளித்தார்.

இதனடிப்படையில் பார்க்கும்போது யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது மனைவி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது உறுதியாகின்றது.

Also Read: ராகுல் காந்தி குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டாரா?

Conclusion

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது மனைவி கூறியதாக சமூக வலைத்தளங்களில்  பரவும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Puthiya Thalaimurai News Head’s Testimonial


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular