செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024

HomeFact Checkமுஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோ!

Fact: பஞ்சாபி பாடகர் சிது மூஸ் வாலாவின் கடைசி பிரார்த்தனையின்போது இந்து, முஸ்லீம் உள்ளிட்ட மதத்தினர் டர்பன் அணிந்துக் கொண்டு இந்த பிரார்த்தனையில் கலந்துக்கொண்டனர். 2022 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு தவறாக பரப்பப்படுகின்றது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், “டெல்லியில் விவசாயிகள் போராட்டம்  என்கிற பெயரில் ஏன் மூர்க்கத்தனமாக இருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.எல்லாம் மர்ம நபர்கள் செய்யும் வேலைதான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல்

X Link | Archived Link

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல்

Archived Link

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் chouhan_jasmeet எனும் பயனர் ஐடியை கொண்டை எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ ஜூன் 09, 2022 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ பழைய வீடியோ என்பதும், நடந்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெளிவாகின்றது.

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல்
Screengrab from X post by @chouhan_jasmeet

இதனையடுத்து அவ்வீடியோவை உற்று நோக்குகையில் சிது மூஸ் வாலாவின் கடைசி பிரார்த்தனையில் டர்பன் அணிவிக்கும் நிகழ்வில் எடுக்கப்பட்டதாக பஞ்சாபி மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல்
Screengrab from viral video

மேலும் அவ்வீடியோவில் காணப்படும் பேனரில்  சிது மூஸ் வாலாவின் படம் இடம்பெற்றிருப்பதுடன், சர்தாரியன் டிரஸ்ட் எனும் வாசகம் இடம்பெற்றிருப்பதையும் காண முடிந்தது.

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல்
Screengrab from viral video

இவற்றை அடிப்படையாக வைத்து இணையத்தில் தேடியதை சர்தாரியன் டிரஸ்ட் பஞ்சாப் எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 10, 2022 வைரலாகும் இதே வீடியோ பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.  சிது மூஸ் வாலாவின் கடைசி பிரார்த்தனையின்போது இந்து, மற்றும் முஸ்லீம்கள்  டர்பன் அணிந்துக்கொண்டு கலந்துக் கொண்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல்
Screengrab from Facebook post by Sardarian Trust Punjab

இந்நிகழ்வு தொடர்பாக அந்த அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Instagram will load in the frontend.

இதனையடுத்து சர்தாரியன் டிரஸ்டின் லூதியானா மாவட்டத்தலைவர் ஹர்பிரீத் சிங்கை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசுகையில், பாடகர் மூஸ் வாலாவின் அப்பாவின் வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாகவும், இந்நிகழ்வில் அனைத்து மதத்தினரும் கலந்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மூஸ் வாலாவின் ரசிகர்கள் இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்த வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார். அவ்வீடியோவில் மூஸ் வாலாவின் தந்தை பல்கவுர் சிங்கும் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

Instagram will load in the frontend.

Also Read: விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் தவறான வீடியோ செய்தி!

Conclusion

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். பஞ்சாபி பாடகர் சிது மூஸ் வாலாவின் கடைசி பிரார்த்தனையின்போது இந்து, முஸ்லீம் உள்ளிட்ட மதத்தினர் டர்பன் அணிந்துக் கொண்ட நிகழ்வே இவ்வாறு பரப்பப்படுகின்றது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடம் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தச் செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
X Post By @chouhan_jasmeet, Dated June 9, 2022
Facebook Post By Sardarian Trust Punjab, Dated June 10, 2022
Instagram Post By @sardarian_trust_punjab, Dated June 7, 2022
Telephonic Conversation With Harpreet Singh, Ludhiana District President, Sardarian Trust

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular