Fact Check
சென்னை மழையில் கார் மாட்டியுள்ளதாக பரவும் பழைய படம்!
Claim: சென்னை மழையில் கார் மாட்டியுள்ளதாக பரவும் படம்.
Fact: இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய, 2021 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.
“மெட்ராஸ்ல கட்டிக் குடுத்தீயளே உம்ம பொண்ணு – நல்லா பாத்துக்கிடுதாங்களா, எப்படி இருக்காளாம்? ஓ இப்பம்தாம்லே ஃபோன்லே பேசினேன். முழுவாம இருக்காளாம்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!
Fact Check/Verification
சென்னை மழையில் கார் மாட்டியுள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் ”Heavy rains pound Tamil Nadu; Grand Southern Trunk highway flooded” என்று தலைப்பிட்டு நவம்பர் 28, 2021 அன்று டெக்கான் ஹெரால்ட் வெளியிட்டிருந்த செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் 2021 ஆம் ஆண்டில் வேறு சில ஊடகங்களும் இதே படத்தை பயன்படுத்தி சென்னை மழை குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ!
Conclusion
சென்னை மழையில் கார் மாட்டியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from Decan Herald, Dated November 28, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)