Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
இதே தகவலையுடைய மற்ற பதிவுகளை இங்கே காணலாம்.
Also Read: ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அமைந்திருக்கும் கற்களா இவை?
சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அந்த வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அது குறித்து தேடினோம்.
அத்தேடலில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் இடம் உண்மையில் வியட்நாமில் இருக்கும் Can tho என்பதை நம்மால் அறிய முடிந்தது. வியட்நாமிய மொழியில் afamily என்கிற செய்தி ஊடகத்தில் இதுகுறித்த செய்தி “After a heavy rain and lightning storm, a section of power line in Can Tho accidentally broke and fell onto the road, causing sparks to fly everywhere. The incident not only caused a power outage in the area but also affected traffic on this road.” என்று கடந்த அக்டோபர் 16ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது.
இதை தவிர்த்து மற்ற சில இணையதளங்களிலும் இச்சம்பவம் வியட்நாமில் நடைபெற்றது என்று தெரிவித்திருப்பதை நம்மால் காண முடிந்தது. அதனை இங்கே காணலாம்.
Also Read: மோகினி டேவின் இசையை ரசிக்கும் ஏஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ உண்மையா?
Sources
afamily.vn
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)
Vijayalakshmi Balasubramaniyan
December 2, 2024
Vijayalakshmi Balasubramaniyan
December 1, 2024
Ramkumar Kaliamurthy
November 10, 2021