வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkரவிவர்மா ஓவியம் என்று நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் புகைப்படம் வைரல்!

ரவிவர்மா ஓவியம் என்று நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் புகைப்படம் வைரல்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சுப்ரமணியபுரம், போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா! உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் சுப்ரமணியபுரம் சுவாதி. இவரது புகைப்படம் ஒன்று  ரவிவர்மா ஓவியம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம்

சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அப்புகைப்படத்தில் மோனாலிசா ஓவியத்துடன் மற்றொரு படத்தை ஒப்பிட்டு, அப்படம் ரவிவர்மா வரைந்த ஓவியம் என்றும், அது மோனாலிசா ஓவியத்தை விட பன்மடங்கு அழகானது என்றும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம் குறித்த பதிவு - 1

Facebook Link | Archive Link

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம் குறித்த பதிவு - 2

Facebook Link | Archive Link

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம் குறித்த பதிவு - 3

Facebook Link | Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜகவுக்கு எதிராக செய்திகளை திரித்து பரப்புவதே எனது வேலை என்றாரா ஊடகவியலாளர் செந்தில் வேல்?

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் ரவிவர்மாவின் ஓவியம் என்று குறிப்பிட்டு வைரலாகி வரும் புகைப்படத்தை காணும்போதே, அப்புகைப்படத்தில் இருக்கும் பெண் சுப்ரமணியபுரம் சுவாதிதான் என்பது தெளிவாக தெரிகின்றது. இருப்பினும் பலர்  அப்படத்தை ரவிவர்மா ஓவியம் என்று நம்பி பகிர்வதால் இதை முறையாக ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்புகைப்படம் குறித்து தேடினோம். நம் தேடலானது pinterest தளத்திற்கு நம்மை கொண்டு சென்றது.

அதில் ராஜா ரவி வர்மாவின் ஓவியத்தை அடிப்படையாக வைத்து சுப்ரமணியபுரம் சுவாதி அவர்களை எடுத்த புகைப்படம் குறிப்பிட்டு ரவிவர்மா ஒவியத்தின் படத்தையும் வைரலாகும் படத்தையும் அருகருகில் வைத்து ஒப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தது.

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம் குறித்த உண்மைத்தன்மை
Source: Pinterest

மேலும் இப்புகைப்படமானது பிரைட்ஸ் ஆஃப் ஹைதராபாத் எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே அப்பக்கத்தில் இப்புகைப்படம் குறித்து தேடினோம். அப்பக்கத்திலும் இப்புகைப்படம் நடிகை சுவாதியின் புகைப்படம் என்று குறிப்படப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம் குறித்த உண்மைத்தன்மை - 1

Instagram Link

சுப்ரமணியுபுரம் சுவாதி அவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரவிவர்மா ஓவியம் என்று வைரலாகும் படம் குறித்த உண்மைத்தன்மை - 2

Facebook Link | Archive Link

மேற்கிடைத்த ஆதாரக்களின் அடிப்படையில் பார்க்கும் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் பெண் நடிகை சுப்ரமணியபுரம் சுவாதிதான் என்பது நிரூபணமாகின்றது.

Also Read: குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?

Conclusion

ரவி வர்மாவின் ஒவியம் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் உண்மையில் ரவி வர்மாவின் ஓவியம் அல்ல, அது நடிகை சுவாதியின் புகைப்படம் என்று உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.  

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Pinterest: https://in.pinterest.com/pin/483925922459259709/

Brides of Hyderabad: https://www.instagram.com/p/By-jPfcBkbz/?utm_source=ig_embed&ig_rid=fea92e3c-0df5-4aa3-b735-a79baac50eab

Actress Swathi Reddy: https://www.facebook.com/permalink.php?story_fbid=2380527605517491&id=1438347506402177


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular