Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim
ஐயப்பன் மாலையை அறுத்து மாணவனை வெளியே தள்ளிய கிறித்தவ பள்ளி
Also Read: மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக பொய்யுரைத்தாரா ஸ்டாலின்?
Fact
கிறித்தவ பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரின் ஐயப்பன் மாலையை அறுத்து வெளியே தள்ளியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் தேர்ட் ஐ எனும் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ டிசம்பர் 28, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவின் டிஸ்கிரிப்ஷனில் இது ஒரு புனைவு வீடியோ என்றும், இவ்வீடியோவில் காணப்படும் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டவை என்றும் தெரிவித்திருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை டிசம்பர் 30 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அந்த வீடியோவிலும் இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அவர் தெளிவுப்படுத்தி இருப்பதையும் காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் உண்மையானது அல்ல; சித்தரிக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது.
Result: Partly False
Sources
Youtube Video from 3rd Eye, Dated December 28, 2024
Facebook Video from Actress Sanjjanaa Galrani, Dated December 30, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.