Fact Check
பஹல்கமில் நடைபெற்ற மனிதாபிமான தாக்குதல் என்று சட்டசபையில் பேசினாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
Claim
பஹல்கமில் நடைபெற்ற மனிதாபிமான தாக்குதல் என்று சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
பஹல்கமில் நடைபெற்ற மனிதாபிமான தாக்குதல் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“RSB media No:2. இவ்வளவு உணர்ச்சி மிகுந்த நிகழ்வில் இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதே!? திமுகவின் கைப்பாவையாக மாறியதின் விளைவா.. அல்லது News editor-ன் கவனக்குறைவா??” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பஹல்கமில் நடைபெற்ற மனிதாபிமான தாக்குதல் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் விகடன் வெளியிட்டதாக வெளியாகியிருந்த நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.” – மு.க.ஸ்டாலின்” என்றே நியூஸ்கார்ட் இடம்பெற்றிருந்தது.



மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தபோது அதில் அவர் சட்டசபையில் பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ இடம்பெற்றிருந்தது. அதில், அவர் “மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல்” என்றே குறிப்பிட்டு பேசியுள்ளார். அதனைத் திரித்து தவறாக பரப்பி வருகின்றனர்.
Also Read: காஷ்மீர் பஹல்கம் தாக்குதலில் கண் முன்னே தந்தையை இழந்த குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
பஹல்கமில் நடைபெற்ற மனிதாபிமான தாக்குதல் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post By Vikatan Magazine, Dated April 23, 2025
X Post From, M.K.Stalin, Dated April 23, 2025