Fact Check
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்ததாக பரவும் வீடியோ.
Fact
வைரலாகும் வீடியோ 2020 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முந்தியோ வெளிவந்த பழைய வீடியோவாகும். இவ்வீடியோவுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பில்லை.
“LOC பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள். இரண்டு பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம் . POK காஸ்மீரை மீட்க வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கடலுக்கடியில் துவாரகை நகரம் அழகு மாறாமல் இருப்பதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்ததாக பரப்பப்படும் வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் Indian Army group எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ மே 14, 2021 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் @jaijawanjaihind எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் மே 1, 2020 அன்றும், @GarudPeGarv எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் 15, 2020 அன்றும் இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் ரிபப்ளிக் பாரத் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் போர் நிறுத்தப்பகுதில் அத்துமீறியதாகவும், இந்திய ராணுவம் அதற்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும் கூறி வைரலாகும் இதே வீடியோவை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவானது ஜூன் 14, 2020 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் இவ்வீடியோ குறைந்தபட்சம் 2020 ஏப்ரல் 15-க்கு முந்தியது என்பது தெளிவாகின்றது.
இவ்வீடியோ சரியாக எங்கே எடுக்கப்பட்டது என தனிச்சையாக எங்களால் கண்டறிய முடியவில்லை.
Also Read: மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான மீது இந்திய ராணுவம் போர் தொடுத்ததாக பரப்பப்படும் வீடியோ 2020 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முந்தியோ வெளிவந்த பழைய வீடியோவாகும். இவ்வீடியோவுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பில்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post By ‘Indian Army group’, Dated May 14, 2021
Facebook Post By @jaijawanjaihind, Dated May 1, 2020
Facebook Post By @GarudPeGarv, Dated April 15, 2020
Report By Repulic Bharat, Dated June 14, 2020