Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கோயம்புத்தூர் கே.ஜி. சினிமாஸ் திரையரங்கில் இருக்கைகளுக்கு பதிலாக படுக்கைகளை மாற்றியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நாள் முழுவதும் உழைத்து களைத்த மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த உருவாக்கப்பட்டதுதான் சினிமா. இந்த சினிமா மௌனப் படத்தில் தொடங்கி பேசும் படம், கலர் படம், 3டி படம், அனிமேஷன் படம் என பல பரிணாமங்களை தொடர்ந்து எடுத்து வந்துள்ளது.
சினிமாவைபோல் சினிமா அரங்கங்களும் கீத்து கொட்டகை திரையரங்கம், 70 எம்எம் திரையரங்கம், ஏசி திரையரங்கம், டிரைவ் இன் திரையரங்கம் என காலத்துக்கேற்ப பல வடிவங்களை அடைந்து வந்துள்ளது. இந்த வரிசையில் கோயம்புத்தூரில் உள்ள கே.ஜி. சினிமாஸ் திரையரங்கில் இருக்கைகளுக்கு பதிலாக படுக்கைகளை மாற்றியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ரவிவர்மா ஓவியம் என்று நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் புகைப்படம் வைரல்!
கோயம்புத்தூர் கே.ஜி. சினிமாஸ் திரையரங்கில் இருக்கைகளுக்கு பதிலாக படுக்கைகளை மாற்றியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து வைரலானப் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இவ்வாறு ஆய்வு செய்ததில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் திரையரங்கம் கோயம்புத்தூர் கே.ஜி. சினிமாஸ் திரையரங்கமே அல்ல, அது சுவிட்சர்லாந்தில் உள்ள பாத்தே ஸ்வீஸ் திரையரங்கம் எனும் உண்மை நமக்கு புலனாகியது.
இத்திரையரங்கம் குறித்து ஹவுஸ் பியூட்டிபுல்.காம் எனும் இணையத்தளத்தில் செய்தி வந்திருந்ததை நம்மால் காண முடிந்தது.
இத்திரையரங்கம் குறித்து மேலும் சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளதையும் நம்மால் காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்துகிறாரா விஜய்? உண்மை என்ன?
சமூக வலைத்தளங்களில் கோயம்புத்தூர் கே.ஜி. சினிமாஸ் திரையரங்கில் இருக்கைகளுக்கு பதிலாக படுக்கைகளை மாற்றியதாக கூறி பரவும் தகவல் தவறானது என்பதையும், உண்மையில் வைரலாகும் படத்தில் இருக்கும் திரையரங்கம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு திரையரங்கத்தின் புகைப்படம் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
House Beautiful: https://www.housebeautiful.com/lifestyle/a29329892/movie-theater-beds-cinema-pathe-switzerland/
Screenrant: https://screenrant.com/movie-theater-with-beds-cinema-pathe/
The Awesome Daily: https://theawesomedaily.com/this-theater-has-beds-for-the-ultimate-movie-watching-experience/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 12, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 21, 2024
Ramkumar Kaliamurthy
May 17, 2024