Fact Check
கூலி திரைப்படத்திற்கு கிடைத்த மோசமான ரசிகர் விமர்சனம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim
கூலி திரைப்படத்திற்கு கிடைத்த மோசமான ரசிகர் விமர்சனம்
Fact
வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான லைகர் திரைப்பட விமர்சனமாகும்.
கூலி திரைப்படத்திற்கு கிடைத்த மோசமான ரசிகர் விமர்சனம் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“தண்ட கருமாந்திரம் இந்த ஷோவோட நிறுத்திக்கங்க.
படம் மயிறு மாதிரி இருக்கு” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கூலி திரைப்படத்திற்கு கிடைத்த மோசமான ரசிகர் விமர்சனம் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் கேள்வி எழுப்பும் நபர் கைகளில் Voice of Madras என்கிற மைக் வைத்திருந்ததைத் தொடர்ந்து அவர்களுடைய யூடியூப் பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், கடந்த ஆகஸ்ட் 25, 2022 அன்று விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய ”லைகர்” திரைப்படத்தின் ரசிகர் விமர்சனம் வெளியாகியிருந்தது.
குறிப்பிட்ட வீடியோவிலேயே தற்போது கூலி விமர்சனம் என்பதாக பரவி வருகின்ற ரசிகரின் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ காட்சியை எடுத்தே கூலி திரைப்படத்திற்கான ரசிகர் விமர்சனம் என்று பரப்பி வருகின்றனர்.
Conclusion
கூலி திரைப்படத்திற்கு கிடைத்த மோசமான ரசிகர் விமர்சனம் என்று பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியாகிய லைகர் திரைப்படத்திற்கான விமர்சனம் என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Voice Of Madras, Dated August 25, 2022
Self Analysis