ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகொரோனாவிற்கு வீட்டு வைத்தியம் கண்டறிந்த பாண்டிச்சேரி மாணவரா?

கொரோனாவிற்கு வீட்டு வைத்தியம் கண்டறிந்த பாண்டிச்சேரி மாணவரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கொரோனாவிற்கு வீட்டு வைத்திய முறைகளைக் கண்டறிந்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு, கோவிட்-19 தொற்றுக்கு ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள், இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சிச்சாறு போதும் என்று கண்டறிந்ததாகத் பதிவு ஒன்று முகநூலில் வைரலாகியது.

கொரோனாவிற்கு
Source: Facebook

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகக்கடுமையாக பரவி வருகின்றது. மக்கள் தினசரி கொத்துக் கொத்தாக மடிகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் இட வசதியின்மை என பலரையும் நாம் கோவிட் அரக்கனிடம் இழந்து வருகின்றோம்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் தற்போது கோவிட்-19 பரவலில் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

இந்நிலையில், “ஒரு மகிழ்ச்சியான செய்தி இறுதியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு, கொரோனாவிற்கு வீட்டு வைத்தியங்களைக் கண்டுபித்தார். இது WHO முதலில் ஒப்புதல் அளித்தது. ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள், இரண்டு டீஸ்பூன் தேன் ஒரு சிறிய இஞ்சி சாறு தொடர்ந்து 5 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால், கொரோனாவின் விளைவு 100% வரை அகற்றப்படலாம் என்பதை அவர் நிரூபித்தார். உலகம் முழுவதும் இந்த சிகிச்சையை எடுக்கத் தொடங்குகிறது. இறுதியாக 2020 இல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம். உங்கள் எல்லா குழுக்களுக்கும் அனுப்பவும் நன்றி.” என்கிற செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவிற்கு
Source: Facebook

Facebook Link

கொரோனாவிற்கு
Source: Facebook

Facebook Link

கொரோனாவிற்கு
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலாகும் தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

கொரோனாவிற்கு வீட்டு வைத்தியத்தைக் கண்டுபிடித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு என்று பரவுகின்ற வைரல் பதிவு குறித்து ஆராய்ந்தோம்.

அதில், குறிப்பிட்ட அந்த பதிவு கடந்த வருடமே கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாவது நமக்குத் தெரிய வந்தது. மேலும், கடந்த ஜூலை 2020 அன்றே, இதுகுறித்த பரவிய வைரல் பதிவு குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை முதல்வரான குர்மீத் சிங், அதுபோன்ற எந்தவித மருத்துவத்தையும் தங்களது மாணவர் யாரும் கண்டறியவில்லை; குறிப்பிட்ட அந்த பதிவு போலியானது என்று பூம்லைவ் இணையதளத்திற்கு விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் குறிப்பிட்ட அப்பதிவு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இதனை மறுத்துள்ளது பிஐபி இணையத்தளம். குறிப்பிட்ட அந்த மருத்துவமுறை குறித்துப் பரவும் தகவல் போலியானது; ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு
Source: Facebook

மேலும், ஆல் இந்தியா ரேடியோவும் குறிப்பிட்ட அப்பதிவு போலியானது என்றும், இதுபோன்ற எந்த வீட்டுமுறை வைத்தியத்தையும் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதையெல்லாம் தாண்டி, உலக சுகாதார நிறுவனம் மித் பஸ்டர் என்னும் தலைப்பின் கீழ் காரமான மிளகு ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்ப்பது கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு
source: WHO

Conclusion:

கொரோனாவிற்கு வீட்டு வைத்தியத்தைக் கண்டுபிடித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு என்று பரவுகின்ற வைரல் பதிவு தவறானது; போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated
Our Sources:

PIB:https://www.facebook.com/pibfactcheck/photos/a.113782816821487/183559436510491/?type=3

WHO:https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/myth-busters

All India Radio: http://newsonair.com/Main-News-Details.aspx?id=415080

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular