மருத்துவமனைகளில் பணத்திற்காக கொரோனா நோயாளிகளை கொலை செய்வதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இவ்வீடியோவில் வரும் பெண், “ஒருவர் உயிரிழந்தால் மருத்துவமனைக்கு 8 லட்சம் தரப்படுவதாகவும், தினமும் 7 பேர் கொல்லப்படுவதாகவும்“ கூறுகின்றார்.
இதற்கடுத்து மருத்துவமனைகளில், மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை கொடுமைப்படுத்தும் இரண்டு கிளிப்பிங்குகள் அவ்வீடியோவில் காணப்பட்டது.
மேற்கண்ட இந்த வீடியோவை நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் எண்ணான 9999499044 என்ற எண்ணுக்கு அனுப்பி, இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வைரல் ஆகி வருவதை நம்மால் காண முடிந்தது.

Post link: https://www.instagram.com/p/COKXGQ0B6rn/?utm_source=ig_embed

Post link: https://www.instagram.com/p/COKZakEhHTF/?utm_source=ig_embed
இதனைத் தொடர்ந்து வைரலாகி வரும் இவ்வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மருத்துமனைகளில் நோயாளிகளை கொல்வதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம். இதில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைப்பெற்ற சம்பவங்களை ஒன்றாக இணைத்து ஒரு தவறான கருத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
முதல் வீடியோ: பெங்களூர் ஆக்ஸ்ஃபோர்ட் மருத்துவமனையில் நடைப்பெற்றது
வீடியோவில் மருத்துவமனை குறித்து பேசும் பெண்மணியின் பெயர் அகிலா ஆகும். இவர் பெங்களுர் ஆக்ஸ்ஃபோர்ட் மருத்துவமனையில் அவரது தந்தையைச் சேர்த்துள்ளார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால்தான் அவர் உயிரிழந்தார் என்று அகிலா குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் குறித்து கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி News First Kannada-வில் செய்தி வந்துள்ளது.
இரண்டாம் வீடியோ: பட்டியாலா மருத்துவமனையில் நடைப்பெற்றது
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கடந்த வருடம் ஆக்ஸ்ட் மாதத்தில் The Tribune-ல் செய்தி வந்துள்ளது.
மூன்றாம் வீடியோ: வங்க தேசத்தில் நடைப்பெற்றது
கோஷ்டி தகராறு காரணமாக முதியவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது கடந்த வருடம் மே மாதத்தில் வங்க தேசத்தில் நடைப்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அதை இங்கே படிக்கலாம்.

நம் விரிவான ஆய்வின் மூலம் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், மூன்று வெவ்வேறு இடங்களில் நடைப்பெற்ற சம்பவங்களை ஒன்றாக இணைத்து, மருத்துவமனைகளில் பணத்திற்காக கொரோனா நோயாளிகள் கொல்லப்படுவதாக தவறாக பரப்பப்படுகின்றது.
Conclusion
மருத்துவமனைகளில் பணத்திற்காக கொரோனா நோயாளிகளை கொலை செய்வதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News First Kannada: https://www.youtube.com/watch?v=LzbqMYl4e4s&t=239s
The Tribune: https://www.youtube.com/watch?v=PUjBkXHbNQk
Sokalersongbad: http://sokalersongbad.com/archives/21780#.XsUXa2gzY2w
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)