Fact Check
வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டது; வைரலாகும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Claim: வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டது.
Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும். வீடியோவில் காணப்படும் சம்பவம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் நடந்துள்ளது.
“வங்காளதேசம் இஸ்கான் கோவில் கோசாலாவின் நிலைமை… வாயில்லா ஜீவன்களை இப்படி நடத்துபவர், சாமானியர்களை எப்படி நடத்துவார். நாளை நமது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். இன்று வங்கதேசம் என்றால் நாளை???” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா?
Fact Check/Verification
வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் பஞ்சாப் கேசரி எனும் ஊடகத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியில் அச்சம்பவமானது பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் கப்ரிஸ்தான் பஞ்சாபி எனும் ஊடகத்திலும் வைரலாகும் சம்பவம் ஜலந்தரில் நடந்ததாக செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் அனிமல் புரொடக்ஷன் ஃபவுன்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் ஷிரிஸ்ட் பக்ஷி என்பவர் இதுக்குறித்து புகார் அளித்துள்ளதையும், அதுக்குறித்து முதல் தகவல் அறிக்கையை அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்ததையும் காண முடிந்தது.
இதை தொடர்ந்து ஷிரிஸ்ட் பக்ஷியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசுகையில் இச்சம்பவம் ஜலந்தரில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் நடந்ததை உறுதி செய்தார். இக்குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், இது தொடர்பாக போராட்டம் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read: சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. உண்மையில் அச்சம்பவமானது பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் நடந்துள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report By Punjab Kesari, Dated November 15, 2024
Report By Khabristanpunjabi, Dated November 27, 2024
Facebook post from Animal Protection Foundation, November 18, 2024
Phone Conversation with Shrist Bakshi(Yuvi Singh), Chairman and Founder, Animal Protection Foundation
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்