Claim
ஔரங்கசீப்பை தகாத வார்த்தையில் திட்டி பதாகை வைத்திருந்த சிஎஸ்கே ரசிகர்.

Also Read: நாடார் சமுதாயத்தினர் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறினாரா?
Fact
சிஎஸ்கே ரசிகர் ஒருவர் முகலாய மன்னர்களுள் ஒருவரான ஔரங்கசீப்பை தகாத வார்த்தையில் திட்டி பதாகை வைத்திருந்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பதையும், அப்படத்திலிருப்பவர் மேயாத மான், ஆடை, குலுகுலு ஆகிய திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் என்பதையும் அறிய முடிந்தது.
ரத்னகுமார் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடந்த போட்டியை மைதானத்திலிருந்து பார்த்ததாக படம் ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்படத்தில் “The Man, The Myth, The Mahi” என்று எழுதப்பட்ட பதாகை ஒன்று அவர் பிடித்திருப்பதை காண முடிந்தது.

இப்படத்தை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.


தொடர்ந்து தேடுகையில் ரத்னகுமாரும் வைரலாகும் படம் மார்பிங் செய்யப்பட்டது என்று தெளிவுப்படுத்தி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Sources
X post by Rathna Kumar, Film Director, Dated March 23, 2025
X post by Rathna Kumar, Film Director, Dated March 24, 2025