Fact Check
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் வரை தடை கோரினாரா சி.வி.சண்முகம்?
Claim
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் முடியும் வரை தடை கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு.
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் முடியும் வரை தடை கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
” சி வி சண்முகம் குடிகாரன்தான்! ஆனால் காரியக்காரன்! பாஜகவின் நீதிபதிகள் அணியை நம்பித்தான் இந்த குடிகாரன் கோர்ட்டில் வழக்கையே தாக்கல் செய்கிறான்! டெல்லி பாதுஷா உத்தரவிட்டால்! பாஜக நீதிபதிகள் அணி இதற்கும் தடை கொடுக்கும்! உச்ச நீதி மன்றம் அந்த தடையை நீக்க மறுக்கும்!” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்துப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞர் என்னும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்க கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு என்பதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் ஜெ வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.
அதில், “ஸ்டாலின் பெயரை வைக்க தடை. தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு” என்று நியூஸ்கார்ட் ஒன்று கடந்த ஆகஸ்டு 01 அன்று இடம்பெற்றிருந்தது.


மேலும், நியூஸ் ஜெ வெளியிட்டதாக இந்த நியூஸ்கார்ட் பரவிய நிலையில், “ பொய்களை பரப்பும் பொய்யர்கள்” என்று இந்த நியூஸ்கார்ட் போலியாக பரவுகிறது என்று நியூஸ் ஜெ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நியூஸ் ஜெ பெயரில் போலி பதிவு – அதிமுக சார்பில் புகார் என்கிற தகவலும் அவர்களுடைய பக்கத்தில் வெளியாகியுள்ளது.
அரசு திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை வைக்க அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் தடை கோரிய வழக்கில் அதற்கு தடையில்லை என்றும், சி.வி.சண்முகத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெறுவதில் தவறில்லை என்றாரா எஸ்.பி.வேலுமணி?
Conclusion
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் முடியும் வரை தடை கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post By, News J, Dated August 01, 2025
Facebook Post By, News J, Dated August 05, 2025
Facebook Post By, News J, Dated august 05, 2025