வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckDemocracy Network அதிமுக முன்னணி என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Democracy Network அதிமுக முன்னணி என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறும் என்று Democracy Network கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Democracy Network சர்வே வெளியிட்டதாக தினமணி வெளியிட்டச் செய்தி
Source: Dinamani

தமிழகத்தை பொறுத்த வரை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக என்ற இரண்டு முக்கிய கட்சிகளே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றது.

ஆனால் இம்முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்ற இவ்விரு பெரிய மலைகளுடன் அமமுக கூட்டணி, மநீம கூட்டணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களம் காண உள்ளன.  

இந்த பல்முனைப் போட்டியில், யாருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்பதனை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளோம்.

இந்நிலையில் Democracy Network, உங்கள் குழு என்ற அமைப்புடன் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்ததாகவும், அதில் அதிமுக கூட்டணிக்கு 122 இடங்களும், திமுக கூட்டணிக்கு 111 இடங்களும், அமமுகவுக்கு 1 இடமும் கிடைக்கும் என முடிவுகள் வந்ததாகவும் தினமணி நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Democracy Network சர்வே வெளியிட்டதாக தினமணி வெளியிட்டச் செய்தி - இணையத் தளப் பதிவு
Source: Dinamani

Archive Link:https://archive.ph/943ZJ

தினமணி வெளியிட்ட இந்தச் செய்தியை பலரும்  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுத் தொடர்பான தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Democracy Network சர்வே வெளியிட்டதாக வந்தப் பதிவு - 1
Source: Twitter

Archive Link: https://archive.ph/atJ9h

Democracy Network சர்வே வெளியிட்டதாக வந்தப் பதிவு - 2
Source: Twitter

Archive Link: https://archive.ph/diZ60

Democracy Network சர்வே வெளியிட்டதாக வந்தப் பதிவு - 3
Source: Twitter

Archive Link: https://archive.ph/W3CNT

Democracy Network கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தினமணி வெளியிட்ட செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 122 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் என்று Democracy Network கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக தினமணி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு கருத்துக் கணிப்பு முடிவை Democracy Network நிறுவனம் வெளியிட்டதா என்பதை முதலில் தேடினோம்.

இந்தத் தேடலில் தினமணி வெளியிட்ட இந்த செய்தி முற்றிலும் தவறானது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது. தினமணி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட இந்த செய்தியானது  சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, Democracy Network நிறுவனம் இச்செய்தி குறித்த மறுப்பு பதிவு ஒன்றை அவர்களது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர்.

அப்பதிவில்,

“4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு கூடிய விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கின்றது. எப்போதும்போல் இம்முறையும் பல நூறு கருத்துக் கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் வெளி வருகின்றது.

இதேபோல் தமிழ்நாடு தேர்தல் குறித்து Democracy Network, உங்கள் குரல் எனும் அமைப்புடன் இணைந்து வெளியிட்ட கருத்துக் கணிப்பு என்று கூறி, ஒரு கருத்துக் கணிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இதில் எங்கள் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படுவதால், இந்த கருத்துக் கணிப்பு குறித்து தெளிவான விளக்கம் கொடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

Democracy Times Network நிறுவனம் இந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதே இல்லை.  இந்த நிறுவனங்களின் சர்வே முடிவுகளுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை.

நாங்கள் எங்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளை எங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கமான @Timesdemocracy-யில் மட்டுமே வெளியிடுவோம். அக்கருத்துக் கணிப்பு படங்கள் அனைத்திலும் எங்கள் லோகோ இடம்பெற்றிருக்கும்.

இதைத் தவிர்த்து வேறு எந்த ஒரு கருத்துக் கணிப்புகளிலும் நாங்கள் பங்காற்றவில்லை.

தமிழகத் தேர்தல் குறித்து Democracy Times Network நடத்திய கருத்துக்கணிப்பு வரும் மார்ச் 25 ஆம் தேதி எங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடப்படும்.”

என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்கூறிய பதிவின் அடிப்படையில் பார்க்கும்போது, வரவிருக்கும் தேர்தலில் அதிமுக முன்னிலை பெறும் என்று Democracy Network கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக தினமணி வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்பது உறுதியாகின்றது.

Conclusion

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறும் என்று Democracy Network கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டடுள்ளது. ஆனால் இத்தகவல் முற்றிலும் தவறானதாகும். இதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Democracy Times Network: https://twitter.com/TimesDemocracy/status/1373978586135240709


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular