Claim
கிரிக்கெட் வீரர் தோனி பாஜகவில் இணைந்துள்ளார்.

இதுக்குறித்த பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என பரவும் செய்தி வீடியோ தற்போதையதா?
Fact
கிரிக்கெட் வீரர் தோனி பாஜகவில் இணைந்துள்ளதாக பரப்பப்படும் படத்தை கூர்ந்து கவனிக்கையில், பிரதமர் மோடியின் கண்கண்ணாடி முழுமையடையாமல் அவர் முகத்தோடு ஒன்றி இருப்பதை காண முடிந்தது. அதேபோல் அப்படத்திலிருந்த பிரதமர் மற்றும் தோனியின் முகம் இயல்பாக இல்லாமல் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது போன்று இருப்பதை காண முடிந்தது.

ஆகவே இதை உறுதி செய்ய Sightengine, Hive Moderation , AI or Not’ உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு படங்களை கண்டறியும் இணையத்தளங்கள் வாயிலாக வைரலாகும் படத்தை பரிசோதித்தோம்.
இச்சோதனையில் வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என உறுதியானது.



Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
Sources
Sightengine Website
Hive Moderation Website
AI or Not Website