சனிக்கிழமை, ஜூன் 15, 2024
சனிக்கிழமை, ஜூன் 15, 2024

HomeFact Checkதிக்விஜய் சிங் அவர்களின் மகள் பாஜகவில் இணைந்தாரா?

திக்விஜய் சிங் அவர்களின் மகள் பாஜகவில் இணைந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவர் திக்விஜய் சிங். இவரின் மகள் பாஜகவில் இணைந்ததாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 Fact Check/Verification

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்பவர் திக்விஜய் சிங். இவர் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு பொதுச் செயலாளராக இருந்தவர். அதேபோல் மத்தியப் பிரதேச முதல்வராகவும் இருந்துள்ளார்.

இதைத்தவிர்த்து ராஜ்ய சபா உறுப்பினராகவும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். அதில் கர்னிகா குமாரி எனும் மகள் புற்றுநோய் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இப்போது  அவருக்கு இரண்டு மகள்களும்  ஒரு மகனுமே உள்ளனர். இந்நிலையில் இவரின் மகள்களுள் ஒருவர் பாஜகவில் இணைந்ததாகத் தகவல் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

https://twitter.com/DeepakA65171797/status/1312984674973609985
https://twitter.com/sodaguru1/status/1313621686885871617

பரவி வரும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் சார்பில் சார்பில் இதை ஆராய முனைந்தோம்.

உண்மை என்ன?

காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் அவர்களின் மகள் பாஜகவில் இணைந்ததாக பரவும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்திக் குறித்து தீவிரமாக ஆராய்ந்தோம்.

அவ்வாறு அராய்ந்ததில் திக்விஜய் சிங் அவர்கள் தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில்  இதுக்குறித்த மறுப்பு ஒன்று வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

அந்த டிவிட்டர் செய்தியில்,

दिग्विजय सिंह के घर में सेंध, BJP में शामिल हुई बेटी – madhya pradesh former cm rajya sabha mp digvijay singh daughter shreyasi singh joins bjp – AajTak

 आजतक फेक न्यूज़ चला रही है। क्या मैं उन पर मानहानि का दावा करूँ? श्रेयसी सिंह मेरी पुत्री नहीं हैं।

என இருந்தது.

இதை தமிழில் மொழிப்பெயர்த்தால்,

திக்விஜய் சிங் வீட்டில் பிளவு, திங்விஜய் மகள் பாஜகவில் இணைந்தார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினருமான திக்விஜய் சிங்கின் மகள் ஸ்ரேயாசி சிங் பாஜகவில் இணைந்தார்- ஆஜ் தக்

 “ஆஜ் தக் போலி செய்திகளை பரப்பி வருகிறது. நான் அவர்கள் மீது அவதூறு  வழக்கு போடலாமா? ஸ்ரேயாசி சிங் என் மகள் அல்ல”

என்பதே அர்த்தமாக வரும்.

SOURCE: TWITTER

இதன்படி பார்த்தால்,  காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங் அவர்களின் மகள் பாஜகவில் சேர்ந்தார் என்று பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று நம்மால் உணர முடிகிறது.

அப்படியானால் பாஜகவில் இணைந்த ஸ்ரேயாசி சிங் யார்? எதற்காக அவர் குறித்து இவ்வாறு ஒரு வதந்தி பரப்பப்படுகிறது என்பதை அறிய, அதுக்குறித்து  நாம் ஆராய்ந்தோம்.

ஸ்ரேயாசி சிங் யார்?

ஸ்ரேயாசி சிங் குறித்து நாம் ஆய்வு செய்தபோது, இதுக்குறித்த செய்தி ஒன்று புதிய தலைமுறையில் வெளியாகி இருந்ததை நம்மால் காண முடிந்தது.

SOURCE: PUTHIYA THALAIMURAI

இச்செய்தியில், இந்த ஸ்ரேயாசி சிங் பீகாரைச் சார்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங் அவர்களின் மகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் வருகிற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரேயாசி அவர்கள் போட்டியிட உள்ளதாகவும் அதற்காகவே இவர் பாஜகவில் இணைந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்து.

இதைத் தவிர்த்து, ஸ்ரேயாசி 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்றும், 2014 இல் நடந்தப் போட்டியில் வெள்ளி வென்றார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Conclusion

நியூஸ்செக்கரின் விரிவான விசாரணைக்குப்பின் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்கின் மகள் பாஜகவில் இணைந்தார் என்று வந்தச் செய்தி தவறானது என்பதும் அவர் பீகாரைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள் என்பதும் தெளிவாகியுள்ளது.

Result: Misleading


Our Sources

Twitter Profile: https://twitter.com/Raamraaj3/status/1313290697957470208

Twitter Profile: https://twitter.com/DeepakA65171797/status/1312984674973609985

Digvijay Singh’s Twitter Profile: https://twitter.com/digvijaya_28/status/1312767539928154112

Twitter Profile: https://twitter.com/sodaguru1/status/1313621686885871617

Puthiya Thalaimurai: https://www.puthiyathalaimurai.com/newsview/82929/Shooter-Shreyasi-Singh-joins-in-BJP-for-upcoming-election


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular