வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

HomeFact Checkஎடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் இல்லை என்று ஜி.கே.மணி கூறினாரா?

எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் இல்லை என்று ஜி.கே.மணி கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் அல்ல என்று ஜி.கே.மணி அவர்கள் கூறியதாக நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜி.கே.மணி குறித்து வந்தச் செய்தி

Fact Check/ Verification

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே பரபரப்பாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி அரசியல் களத்தை ஆக்கிரமித்து வருகிறது.

அதன் வரிசையில் தற்போது பேசுப்பொருளாக இருக்கும் செய்தி அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதே. அதிமுக தரப்பில் ஏற்கனவே பலக்கட்ட சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான முதல்வர் வேட்பாளர் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டனர்.

இருப்பினும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும் என்று கூறியுள்ளனர். இது கூட்டணிக்குள் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி. முனுசாமி அவர்கள் பாஜக தலைவர்களின் இந்த பேச்சுக் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

இந்த பிரச்சனையே ஒரு முடிவுக்கு வராத நிலையில் இருக்கும்போது  அதிமுகவுடன் கூட்டணையில் இருக்கும் மற்றொரு கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரான ஜி.கே.மணி அவர்கள் “கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல” என்று கூறியதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது.

நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டதுபோல் “கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல” என்று ஜி.கே.மணி அவர்கள் எங்கேயாவது பேசியுள்ளாரா என்பதை அறிய இதுக்குறித்து தேடினோம்.

அவ்வாறு தேடியதில், ஜி.கே.மணி அவர்களின் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ ஒன்றை நம்மால் காண முடிந்தது. அவ்வீடியோவைக் கண்டதன் மூலம் நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில் ஜி.கே.வாசன் அவர்கள்,

“அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பது அவர்கள் கட்சியின் தனி நிலைப்பாடு. கூட்டணி கட்சிகளுக்கும் அதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோமா என்பதை தேர்தல் நேரத்தில்  மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். “

என்றே பேசியுள்ளார்.

எந்த ஒரு இடத்திலும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளின் முதல்வர்  வேட்பாளர்  இல்லை என்று ஜி.கே.வாசன் அவர்கள் பேசவே இல்லை.

ஜி.கே.வாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ, வாசகர்களின் பார்வைக்காக:

Courtesy: Sun News

Conclusion

எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் அல்ல என்று ஜி.கே.மணி அவர்கள் கூறியதாக நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டச் செய்தியானது முற்றிலும் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

News18 Tamilnadu: https://twitter.com/News18TamilNadu/status/1344486285193330690

Sun News: https://www.youtube.com/watch?v=C9DOfExIk9Y


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular