Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
“வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் கவுண்டமணி செந்தில் திரைப்பட காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன்” என்று தொண்டர்களை சீமான் எச்சரித்ததாக சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமாக சீட் கொடுக்கவிருப்பதாகவும் இக்கட்சி அறிவித்துள்ளது.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் ஒன்று நடைப்பெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்,
“வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் கவுண்டமணி செந்தில் திரைப்பட காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன்”
என்று பேசியதாக சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியைப் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஊடங்களில் வெளிவந்ததுபோல் தொண்டர்களை சீமான் “கவுண்டமணி செந்தில் திரைப்பட காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன்” என்று பேசினாரா என்பது குறித்து முதலில் தேடினோம்.
நம் தேடலில் நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரான இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் ஊடகங்களில் வந்த இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து, அத்தினத்தில் சீமான் பேசிய காணொளி ஒன்றை பதிவிட்டுருந்ததை காண முடிந்தது.
இக்காணொளியை கூர்ந்து கவனித்தபோது சீமான் அவர்கள் கிரீஸ் டப்பா எனும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை என்பது தெளிவாகிறது.
ஆனால் அவர் செந்தில் கவுண்டமணி நகைச்சுவையை மேற்கோளாக பயன்பயன்படுத்தியது உண்மையே. ஆனால் அந்த மேற்கோளை ஊடகங்களில் கூறியது போல் எச்சரிக்கைத் தொனியுடன் அவர் பயன்படுத்தவில்லை.
நிறைய வேலைகள் இருக்கும்போது தேவையில்லாத நெருக்கடியும் அழுத்தமும் யாரேனும் தந்தால் அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள் என்றே அர்த்தத்திலேயே இதை கூறியுள்ளார்.
இதன்படி பார்க்கையில் சீமான் அவர்கள் தன் தொண்டர்களிடம் ஊடகங்களில் சித்தரித்ததுபோல் ஒரு சர்வாதிகாரத் தன்மையுடனும் எச்சரிக்கைத் தொனியுடனும் பேசவில்லை என்பது தெளிவாகிறது.
“வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் கவுண்டமணி செந்தில் திரைப்பட காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன்” என்று தொண்டர்களை சீமான் எச்சரித்ததாக சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானதாகும்.
சீமான் அவர்கள் அறிவுறுத்தலாக கூறிய விஷயத்தை எச்சரிக்கை விடுத்ததாக சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளது. இதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sun News: https://twitter.com/sunnewstamil/status/1353182269196759041
Twitter Profile: https://twitter.com/U2Brutus_off/status/1353206829103288320
Twitter Profile: https://twitter.com/rajivgandhilaw/status/1353188064839888896
Idumbavanam Karthik: https://twitter.com/idumbaikarthi/status/1353315429654032386
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 9, 2025
Ramkumar Kaliamurthy
March 17, 2025
Ramkumar Kaliamurthy
March 4, 2025