Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சீமானைப் பற்றி புகழ்ந்து பேசிய திரைப்பட நடிகர் சாய் தீனா
வைரலாகும் வீடியோவில் அவர் தவெக தலைவர் விஜய் பற்றியே பேசியிருந்தார்.
சீமானைப் பற்றி புகழ்ந்து பேசிய திரைப்பட நடிகர் சாய் தீனா என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”எங்க அண்ணன் எங்க உயிரு..!” என்று இந்த வீடியோ பரவுகிறது.

X Link/Archived Link


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வீடியோ உண்மையா?
சீமானைப் பற்றி புகழ்ந்து பேசிய திரைப்பட நடிகர் சாய் தீனா என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த அக்டோபர் 18, 2019 அன்று ”THALAPATHY-லாம் கலைத்தாயின் தவம் – Sai Dheena Emotional Interview | Bigil | Vijay ” என்று Little Talks யூடியூப் ஊடகத்தில் நடிகர் தீனாவின் பேட்டி வெளியாகியிருந்தது. அதில், தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் பற்றி புகழ்ந்து பேசியிருந்தார் தீனா.
குறிப்பிட்ட வீடியோவில் ஒரு பகுதியை எடுத்து அவர் நாதக தலைவர் சீமான் பற்றி புகழ்ந்து பேசியதாக பரப்பப்படுகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: பிரதமர் மோடிக்கு சீனா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தாக பரவும் படம் உண்மையானதா?
சீமானைப் பற்றி புகழ்ந்து பேசிய திரைப்பட நடிகர் சாய் தீனா என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video from, Little Talks, Dated October 18, 2019
Self Analysis
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
October 24, 2025
Ramkumar Kaliamurthy
November 26, 2025