Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சென்னை விஜிபி தங்க கடற்கரையில் சிலை மனிதராக இருக்கும் தாஸ் அவர்கள் இறந்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வருகிறது
சென்னையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் விஜிபி தங்கக் கடற்கரையும் ஒன்றாகும். விஜிபி தங்கக் கடற்கரையின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அங்கிருக்கும் சிலை மனிதர்களாவர்.
இந்த அறிவியல் வளர்ச்சி உலகில் சேர்ந்தார்போல் ஒரு மணி நேரம் கூட நம்மால் நிற்க முடியவில்லை. ஆனால் இந்த சிலை மனிதர்கள் உடலில் சிறு அசைவும் இல்லாமல் நாள் முழுவதும் நிற்பார்கள்.
நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் இவர்களை பேச வைக்கவோ, சிரிக்க வைக்கவோ முடியாது. இவ்வாறு தங்கள் வாழ்நாளின் ஒரு பகுதியை சிலையாகவே கழித்த இவர்களின் வாழ்க்கையை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த கொரானா.
கொரானாக் காரணமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்ப்பதற்காக அனைத்து பொழுதுப்போக்கு இடங்களும் மூடப்பட்டன. அவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களில் விஜிபி தங்கக் கடற்கரையும் ஒன்று.
விஜிபி மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த சிலை மனிதரான தாஸ் அவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. கடந்த 4 மாதங்களாக வீட்டிலிருந்த இவர், தற்போது காவலாளி வேலைக்குச் சென்று வருகிறார்.
இதுக்குறித்த விரிவானச் செய்தி நியூஸ் 18-ல் வந்துள்ளது.
காவலாளி வேலைச் சென்று வந்த சிலை மனிதர் தாஸ் அவர்கள் கொரானாத் தொற்றுக் காரணமாக இறந்து விட்டதாகச் செய்தி ஒன்று வின் நியூஸ், வெப் துனியா உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இச்செய்தியை உண்மை என்று நம்பி, பலரும் இச்செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரப்பப்படும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
பரவும் இச்செய்திக் குறித்து நாம் தேடுகையில் இச்செய்தியின் பின்னணியில் இருக்கும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் விஜிபி சிலை மனிதர் இறக்கவே இல்லை. அவர் இறந்ததாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும். பரவி வரும் இத்தகவலை வதந்தி என்று கூறி, சிலை மனிதர் தாஸ் அவர்களே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வீடியோ உங்களுக்காக:
நம் விரிவான ஆய்வுக்குப்பின், விஜிபி சிலை மனிதர் இறந்து விட்டார் என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியானது, பொய்யானச் செய்தி என்று நமக்குத் தெளிவாகியுள்ளது.
News 18: https://www.youtube.com/watch?v=92X5RVKC3HA
Win News’s Twitter Profile: https://twitter.com/WINNEWS_IN/status/1308105858497130496
Twitter Profile: https://twitter.com/NagalingamArun/status/1308223804724752385
Twitter Profile: https://twitter.com/Bombhaat/status/1308326313258749957
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)