சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkமதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாரா அண்ணாமலை?

மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் அண்ணாமலை

Fact: வைரலாகும் படத்திலிருப்பவர் அண்ணாமலை அல்ல, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆவார். அதுபோல அவர் ஆசீர்வாதம் வாங்குவது மதுவந்தியிடம் இல்லை, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவிடமாகும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடிகையும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான மதுவந்தியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதாக  புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  

அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக பரவும் தகவல்

X Link | Archive Link

அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக பரவும் தகவல்

Archive Link

அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

Fact Check/Verification

அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர்களுள் ஒருவரான எஸ்.ஜி.சூர்யா பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவிடம் ஆசீர்வாதம் பெற்றதாக கூறி வீடியோ ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சி வைரலாகும் படத்துடன் ஒற்றுப்போவதையும் நம்மால் காண முடிந்தது.

அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக பரவும் தகவல்

வாசகர்களின் புரிதலுக்காக வைரலாகும் படத்தையும், வீடியோவின் அக்காட்சியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக பரவும் தகவல்

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பவர் அண்ணாமலை அல்ல; எஸ்.ஜி.சூர்யா என்பதும், அவர் ஆசீர்வாதம் வாங்குவது மதுவந்தியிடம் அல்ல; பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவிடம் என்பதும் தெளிவாகின்றது.

Also Read: பிரதமர் மோடியை விமர்சித்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட மணிப்பூர் சிறுமி என்று பரவும் மியான்மர் வீடியோ!

Conclusion

அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Tweet from S.G.Suryah, Stater Secretary, Tamilnadu BJP, Dated March 08, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular