Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இயக்குனர் வெற்றிமாறன், கோவை மற்றும் சேலம் மக்கள் குறித்து கருத்து ஒன்றினை ட்விட்டரில் பதிவிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளமான முகநூலில் வைரலாகிறது.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 2 ஆம் தேதியான நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு வெளியாகின. திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் திமுக, 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கனியை பறித்துள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். இதுஒருபுறம் இருக்க கொரோனாவின் தாண்டவமும் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், புதிய அரசு மிகச்சவாலான சூழ்நிலையில் பொறுப்பேற்க உள்ளது.
இந்நிலையில், சேலத்தில் அதிமுகவும் கோயம்புத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் பல இடங்களில் அதிமுக மற்றும் பாஜகவும் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில் அதுகுறித்த விமர்சனங்களும் அதிகளவில் வருகின்றன.
இந்நிலையில், அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத நிலையிலும் கட்சி விசுவாசத்திற்காக பலரும் அக்கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளனர் என்பது போல கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.
அவ்வகையில், பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோயம்புத்தூர் சேலம் காரனுங்ககிட்ட சொல்லுங்க MGR JAYALALITHA செத்துட்டாங்கன்னு” என்பதாக விமர்சித்ததாக ட்விட் புகைப்படம் ஒன்று முகநூலில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இயக்குனர் வெற்றிமாறன், கோயம்புத்தூர் சேலம் மக்கள் குறித்து கூறிய கருத்து என்பதாகப் பரவும் ட்வீட் புகைப்படம் குறித்து உண்மையறிய அவரது ட்விட்டர் கணக்கினை ஆராய்ந்தோம்.
இயக்குனர் வெற்றிமாறனின் உண்மையான, அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு @VetriMaaran என்பதாகும்.
ஆனால், குறிப்பிட்ட ட்விட் பரவும் கணக்கு @Vjadi10 என்கிற பெயரில் உள்ளது. ஒரு வேளை அது ஒரு தனிநபர், வெற்றிமாறனின் மேல் கொண்ட அபிமானத்தால் அவரது புகைப்படத்தை பதிவேற்றி உருவாக்கி இருக்கலாம். ஏனெனில், மற்ற விவரங்கள் அதில் ஒரு தனிநபரையே குறிக்கிறது.
எனவே, குறிப்பிட்ட அந்த ட்விட்டர் பக்கம் வெற்றிமாறனது கிடையாது என்பது உறுதியானது.
தொடர்ந்து, இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது தவறானது. இதுபோன்ற எந்தவித ட்விட்டையும் நான் இடவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
எனவே, அவரது பெயரில் முகநூலில் பரவும் அந்த குறிப்பிட்ட ட்விட் புகைப்படம் போலியானது என்பது நமக்கு உறுதியானது.
இயக்குனர் வெற்றிமாறன் கோயம்புத்தூர் சேலம் மக்கள் குறித்து கூறிய கருத்து என்பதாகப் பரவும் ட்வீட் புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Director Vetri maaran twitter account: https://twitter.com/VetriMaaran
Director Vetri maaran
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 22, 2023
Vijayalakshmi Balasubramaniyan
April 8, 2023
Vijayalakshmi Balasubramaniyan
March 24, 2021