ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதொல்.திருமாவளவன் "நீலம் எங்கள் உரிமை நிறம்" என்றதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

தொல்.திருமாவளவன் “நீலம் எங்கள் உரிமை நிறம்” என்றதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: “நீலம் எங்கள் உரிமை நிறம்” – தொல்.திருமாவளவன்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். சன் நியூஸ் தரப்பில் அதை உறுதி செய்துள்ளோம்.

தொல்.திருமாவளவன் நீலம் எங்கள் உரிமை நிறம் என்று கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தொல்.திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், நீலம் எங்கள் உரிமை நிறம் என்றதாகவும், குறிப்பிட்ட ஒரு ட்விட்டர் பக்கத்தை நீலம் என்கிற ஒரே காரணத்திற்காக தொடர்ந்தேன் என்று கூறியதாகவும் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screengrab from Twitter@Umagarghi26
Screengrab from Facebook/narayanan.magesh.1
Screengrab from Facebook/kpkalla

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் வதந்தி!

Factcheck / Verification

தொல்.திருமாவளவன் நீலம் எங்கள் உரிமை நிறம் என்று கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட செய்தி முழுவதும் அவதூறான வகையில் அமைந்திருந்தபோதும், தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்று எதுவும் பதிவிட்டுள்ளாரா என்று தேடியபோது அவர் அப்படி எதையும் பகிர்ந்திருக்கவில்லை.

வைரல் நியூஸ்கார்ட் சன் நியூஸ் பெயரில் பரவிய நிலையில் அதிலிருக்கும் செய்தியும் அவதூறு நோக்கில் இருந்ததால், சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜ் கார்த்திக்கை இதுகுறித்து தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர், “குறிப்பிட்ட நியூஸ்கார்ட் போலியானது; அப்படி எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

ஆளுநர் குறித்து திருமாவளவனின் கருத்து இடம்பெற்ற நியூஸ்கார்ட்டே சமீபத்தில் சன் நியூஸ் தமிழில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ”ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் வரை போராட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை” என்று தொல்.திருமாவளவன் கூறியதாக அந்த நியூஸ்கார்ட் வெளியாகியிருந்தது.

எனவே, குறிப்பிட்ட நியூஸ்கார்ட் போலியாகப் பரவி வருகிறது என்பது இதன் மூலமாக உறுதியாகிறது.

Also Read: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Conclusion

தொல்.திருமாவளவன் நீலம் எங்கள் உரிமை நிறம் என்று கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With, Manoj Karthik, Sun News Digital, Dated April 07, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular