திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkதிமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

திமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: திமுகவைவிட்டு வெளியேறும் செந்தில்குமார் எம்.பி.

Fact: இத்தகவல் தவறானது. வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டு பரவுகிறது.

திமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“திமுகவைவிட்டு வெளியேறும் செந்தில்குமார் எம்.பி. கூட்டணி கட்சிகள் என்பதற்காக ஹிந்தி ஆதிக்கத்திற்கு துணை போகமுடியாது! கொள்கையை விட்டுவிட்டு திமுகவில் பயணிக்க விருப்பமில்லை. பாராளுமன்ற கூட்டத்தொடரில் தான் வடமாநிலங்களின் உண்மை நிலை குறித்தான கருத்துக்கு கட்சிக்குள்ளையே தனக்கு ஆதரவில்லை எனக்கூறி எம்.பி. செந்தில்குமார் ஆதங்கம்” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

திமுக எம்பி செந்தில்குமார்
Screenshot from X @Mini52614198

Archived Link

Screenshot from Facebook/baruthi

Facebook Link

Screenshot from Facebook/Vetrivel Samattiyar

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

திமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று விளக்கமளித்துள்ளனர்.

ஐந்து மாநில தேர்தல் குறித்த கருத்துக்கு செந்தில்குமார் எம்பி ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தின் மூலமாக மன்னிப்பு கோரிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

திமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated December 27, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular