Fact Check
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று பரவும் 2021ஆம் ஆண்டு வீடியோ!
Claim: நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களே காப்பாற்ற அருகில் உள்ள நபர்களே உதவிக்கு அழைக்கும் தாய் நாய்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களே காப்பாற்ற அருகில் உள்ள நபர்களே உதவிக்கு அழைக்கும் தாய் நாய்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.



X Link/Archived Link/Archived Article
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check/Verification
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த அக்டோபர் 15, 2021 அன்று The Weather Network வெளியிட்டிருந்த இந்த வீடியோ நமக்குக் கிடைத்தது.

அதன்படி, கேரள மாநிலம் பாலக்காட்டில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட தாய் நாயும், இரண்டு குட்டிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக செய்தி வீடியோ இடம்பெற்றிருந்தது. News Flare வெளியிட்டிருந்த இதுகுறித்த செய்தி வீடியோவே தற்போது வைரலாகி வருவது நமக்கு தெரியவந்தது.
மேலும், Insider News, The weather Channel ஆகியோரும் 2021ஆம் ஆண்டே இந்த வீடியோ குறித்த செய்தியைப் பகிர்ந்திருந்தனர். குறிப்பிட்ட வீடியோவே, தற்போது வயநாட்டில் நடைபெற்ற நிகழ்வு என்பதாகப் பரவி வருகிறது.
Also Read: சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from, theweathernetwork, Dated October 15, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)