Fact Check
பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?
Claim
பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Also Read: மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக பொய்யுரைத்தாரா ஸ்டாலின்?
Fact
பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, முன்னதாக தமிழக பாஜகவின் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக்கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் புதிய தலைமுறை நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் புதிய தலைமுறை வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், ‘வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது, புதிய தலைமுறை அந்த நியூஸ்கார்டை வெளியிடவில்லை’ என்று பதிலளித்தார்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பாஜக தொண்டர்கள் செருப்பு அணிய வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதானது என்பது உறுதியாகின்றது.
Also Read: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றாரா திருச்சி சிவா?
Result: False
Sources
Phone conversation with S.G.Suryah, State Secretary, Tamilanadu BJP
Phone conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)