சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

HomeFact Checkதமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசனாரா டாக்டர் கிருஷ்ணசாமி?| வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசனாரா டாக்டர் கிருஷ்ணசாமி?| வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

டாக்டர் கிருஷ்ணசாமி  தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக பரவும் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட்

Also Read: எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரினாரா?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் குறிப்பிட்டார்.  இந்த நிகழ்வானது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு என்றுதான் குறிப்பிடவேண்டும் என்று ஒரு சாரரும், ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதே சரியானது என்று மற்றொரு சாரரும் தினம்தினம் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இச்சம்பவம் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக தந்தி டிவியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த நியூஸ்கார்டில்,

“ஸ்டாலினுடைய தோற்றத்தைப் பார்த்தால் அறிவாளி போல் தான் தெரியும். ஆனால் உண்மையில் அவர் ஒரு பைத்தியக்காரன்.”

என்று கிருஷ்ணசாமி பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியூஸ்கார்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி  தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக பரவும் பதிவு  - 1

ARCHIVE

டாக்டர் கிருஷ்ணசாமி  தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக பரவும் பதிவு  -

ARCHIVE

டாக்டர் கிருஷ்ணசாமி  தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக பரவும் பதிவு  -

ARCHIVE

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக முதல்வரை அழைத்து வர புல்லட் புரூஃப் காரை அனுப்பினாரா பிரதமர்?

Fact Check/Verification

டாக்டர் கிருஷ்ணசாமி  தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி  தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என்பது குறித்து தேடினோம்.

நம் தேடலில் வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் முற்றிலும் தவறான ஒன்று என்பது தெளிவாகியது. தந்தி தொலைக்காட்சி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் பொய்யான ஒன்று என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

உண்மைத்தன்மை

ARCHIVE

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டதா?

Conclusion

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Thanthi TV: https://www.facebook.com/ThanthiTV/posts/4204988646296114

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular