Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடை சோதனையில் போலி தங்கம் பிடிபட்டது
வைரலாகும் வீடியோ கடந்த 2017ஆம் ஆண்டு முதலே பரவுகிறது. மேலும், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடை சோதனையில் போலி தங்கம் பிடிபட்டது என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”*குவைத்தை* , தொடர்ந்து *துபாயில்* நடந்த சோதனையிலும் *கல்யாண் ஜூவல்லரி* ல் உள்ள நகை களில் *_இரும்பு_* கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இந்த இரு நாடுகளிலும் கல்யாண் ஜூவல்லரிக்கு *_தடை_* விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.. எனவே இனி *நகை வாங்க* எந்த கடைக்கு சென்றாலும் கையில் *காந்தத்தோடு( Magnet )* சென்று சோதனை செய்து வாங்குங்கள். கீழ் கண்ட கல்யாண் ஜூவல்லரி வீடியோக்களை பாருங்கள் புரியும்..” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடை சோதனையில் போலி தங்கம் பிடிபட்டது என்பதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 21, 2017ஆம் ஆண்டு முதலே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவது நமக்கு உறுதியாகியது.
மேலும், தற்போது பரவி வருகின்ற வைரல் பதிவின் கீழேயே கல்யாண் ஜூவல்லர்ஸ் சார்பில், “சமூக ஊடகங்களில் போலி செய்திகளைப் பரப்புவதைத் தவிர்ப்போம். கல்யாண் ஜூவல்லர்ஸ் குறித்து வதந்தி பரப்பிய நபர்கள் கடந்த 2018ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டுவிட்டனர்” என்று விளக்கமளித்துள்ளது.
கடந்த மார்ச் 30, 2018 அன்று நியூஸ் மினிட் வெளியிட்டிருந்த “Dubai cops act on those spreading fake news on quality of Kalyan Jewellers gold” என்கிற தலைப்பிலான முழுமையான செய்தி கட்டுரையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் மீது அவதூறு பரப்பிய 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க துபாய் பொது வழக்கறிஞர், துபாய் காவல்துறைக்கு உத்தரவிட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மற்றொரு செய்தியை இங்கே படியுங்கள்.

Also Read: அன்வர் ராஜா போனால் போகட்டும்; அதிமுகவிற்கு இஸ்லாமிய வாக்குகள் தேவையில்லை என்றாரா ராஜேந்திர பாலாஜி?
துபாய் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை கடை சோதனையில் போலி தங்கம் பிடிபட்டது என்பதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Reply from, Kalyan Jewelers, Dated July 24, 2025
YouTube Video from, Malainine Bella, Dated November 21, 2017
News Report from, News Minute, Dated March 30, 2018