Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பிரதமர் மோடி மீதுள்ள பற்றால் பேருந்துகளுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசியுள்ள துபாய் மன்னர்
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே பரவுகிறது.
பிரதமர் மோடி மீதுள்ள பற்றின் காரணமாக பேருந்துகளுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசியுள்ள துபாய் மன்னர் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“துபாய் மன்னருக்கு பிரதமர் மோடியை எந்த அளவுக்கு பிடிக்குமோ, அந்த அளவுக்கு ஆரஞ்சு நிறமும் பிடிக்கும் போல! துபாய் ஷார்ஜாவில் ஆரஞ்சு வண்ணமயமாய் பேருந்துகள்.” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு பதில் போலியான நபருக்கு பாதபூஜை செய்ததா பாஜக?
பிரதமர் மோடி மீதுள்ள பற்றின் காரணமாக பேருந்துகளுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசியுள்ள துபாய் மன்னர் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 03, 2011 அன்று ”Public transportation in Sharjah prepares for Eid al-Adha with 70 buses” என்று வெளியாகியிருந்த ஊடகச் செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளதை நம்மால் காண முடிந்தது.
மேலும், அந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து பேருந்து குற்த்த செய்திகளில் இப்புகைப்படம் இடம்பெற்று இருப்பதை நம்மால் காண முடிந்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!
பிரதமர் மோடி மீதுள்ள பற்றால் பேருந்துகளுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசியுள்ள துபாய் மன்னர் என்று பரவும் படம் பழைய புகைப்படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News Report from, Emirates News agency, Dated November 03, 2011
News Report From, 24, Dated July 25, 2014
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 29, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 10, 2024
Vasudha Beri
May 16, 2024