Fact Check
‘சீமானை கழுவி ஊற்றிய சாட்டை துரைமுருகன்’ என்று பரவும் வீடியோ உண்மையானதா?
Claim: சீமானை கழுவி ஊற்றிய சாட்டை துரைமுருகன் என்று பரவும் வீடியோ
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். பத்திரிக்கையாளர் பாண்டியன் குறித்து துரைமுருகன் பேசிய கருத்தே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவதெல்லாம் பொய் என்று கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அஇஅதிமுகவின் பெயர் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாற்றப்படும் என்றாரா ஈ.பி.எஸ்?
Fact Check/Verification
சீமானை கழுவி ஊற்றிய சாட்டை துரைமுருகன் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைராலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. சாட்டை துரைமுருகன் சாட்டை யூடியூப் சேனலில் ”வசமாக மாட்டிக்கொண்ட வீரலெட்சுமி | பைத்தியம் முத்திப்போன விஜயலெட்சுமி | ஆதாரங்களுடன் நாம்தமிழர்“ என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவ்வீடியோவில் 11:21-க்கு பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் குறித்து துரைமுருகன் கடுமையாக பேசி இருந்ததை காண முடிந்தது.
இப்பகுதியை எடிட் செய்தே சீமான் குறித்து துரைமுருகன் பேசியதாக பரப்பப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து சாட்டை துரைமுருகனை தொடர்புக் கொண்டு வைரலாகும் வீடியோ குறித்து விசாரித்தோம். அவர் “இவ்வீடியோ போலியானது, தமிழா தமிழா பாண்டியன் குறித்து நான் பேசியதை கட் செய்து இவ்வாறு மாற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
Also Read: உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை ‘நிர்வாண போராட்டம்’ செய்வேன் என்றாரா அர்ஜூன் சம்பத்?
Conclusion
சீமானை கழுவி ஊற்றிய சாட்டை துரைமுருகன் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் தெளிவு செய்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
YouTube Video from Saattai, Dated September 04, 2023
Phone Conversation with Saattai Duraimurugan
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)