முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி (26/02/2021)) தமிழக அரசு சார்பில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சீர்மரபினருக்கு 7% ஒதுக்கீடு வழங்கவும் இம்மசோதாவில் வழி செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்க்கீடு அளிப்பது நியாயமற்றது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா ரத்து செய்யப்படும் என்றும் கூறியதாக நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/sZ85y

Archive Link: https://archive.ph/nt6XJ

Archive Link: https://archive.ph/XZgl0
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
எ.வ.வேலு அவர்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாகக் கூறி பரப்பப்படும் புகைப்படச் செய்தியைக் காணும்போதே அது போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படச் செய்திதான் என்பதை நம்மால் உணர முடிகின்றது. ஏனெனில் நியூஸ் 7 தமிழில் வழக்கமாக பயன்படுத்தும் டிசைன், எழுத்துறு (Font) ஆகியவை இதில் காணப்படவில்லை.
ஆயினும் இதை உறுதி செய்ய, இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 7 தமிழில் வெளிவந்துள்ளதா என்பதை நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் இந்தப் புகைப்படச் செய்திக் குறித்து நியூஸ் 7 தமிழ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றை நம்மால் காண முடிந்தது.
அதில்,
நியூஸ் 7 தமிழில் வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்தி!
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்காணும் டிவிட்டர் பதிவின் அடிப்படையில் பார்க்கும்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று எ.வ.வேலு அவர்கள் கூறியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகின்றது.
Conclusion
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று எ.வ.வேலு அவர்கள் கூறியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News 7 Tamil’s Twitter Handle: https://twitter.com/news7tamil/status/1373207825317437444
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)