சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

HomeFact CheckPoliticsகே.பி.முனுசாமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசினாரா?

கே.பி.முனுசாமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அதிமுக துணை  ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கே.பி.முனுசாமி குறித்து பரவும் புகைப்படச் செய்தி
Source: Facebook

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க நேற்று முன்தினம் ( 26/02/2021) தமிழக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது.

மேலும் சீர்மரபினருக்கு 7% ஒதுக்கீடு வழங்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட அளவு உள் ஒதுக்கீடு வழங்க புதிய பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக துணை  ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் வன்னியர் சமூகத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தோடு ஒப்பிட்டு, அந்த குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படச் செய்தியை பகிர்ந்து, பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கே.பி.முனுசாமி குறித்து பரவும் தகவல் - 1
Source: Facebook
கே.பி.முனுசாமி குறித்து பரவும் தகவல் - 2
Source: Facebook
கே.பி.முனுசாமி குறித்து பரவும் தகவல் - 3
Source: Facebook

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

லோட்டஸ் நியூஸின் புகைப்படச் செய்தியை அடிப்படையாக வைத்தே கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகின்றது.

ஆகவே வைரலாகும் இப்புகைப்படச் செய்தி உண்மையிலேயே லோட்டஸ் நியூஸில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய லோட்டஸ் நியூஸின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். ஆனால் இவ்வாறு புகைப்படச் செய்தி லோட்டஸ் நியூஸில் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே லோட்டஸ் நியூஸின் தலைமை நிர்வாக அதிகாரி சரவணன் அவர்களை தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்,

“இது போலியானத் தகவல். இவ்வாறு ஒரு செய்தியை லோட்டஸ் நியூஸ் வெளியிடவில்லை”

 என்று தெரிவித்தார்.  

மேலும் இதுக்குறித்த மறுப்பு செய்தி ஒன்றையும் வாட்சாப் மூலம் நமக்கு பகிர்ந்தார்.

அந்த மறுப்பு செய்தி உங்கள் பார்வைக்காக:

கே.பி.முனுசாமி குறித்து பரவும் தகவலுக்கான மறுப்பு செய்தி
Source: WhatsApp

இதன்மூலம் கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தி போலியாக உருவாக்கப்பட்ட் ஒன்று என்பது நமக்கு தெளிவாகியது.

Conclusion

அதிமுக துணை  ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படச் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/diwanismail.hse/posts/3940545142676191

Facebook Profile: https://www.facebook.com/kongusakthi.sakthivadivel/posts/1758058437705925

Mr. Sarvanan, CEO of Lotus TV:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular