ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஇஸ்ரேலுக்குள் பாராசூட் மூலம் நுழையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

இஸ்ரேலுக்குள் பாராசூட் மூலம் நுழையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இஸ்ரேல் நாட்டுக்குள் பாராசூட் மூலம் நுழையும் ஹமாஸ் பயங்கரவாதிகள்
Fact: வைரலாகும் வீடியோ எகிப்தில் எடுக்கப்பட்டதாகும்.

இஸ்ரேலுக்குள் பாரசூட் மூலமாக நுழையும் ஹமாஸ் படையினர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”PUBGல வர்ற மாதிரி இஸ்ரேலுக்கு உள்ள இறங்கிருக்காங்க” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from Facebook/Bala

Facebook Link

Screenshot from Facebook/moses.asli

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காஸா மீது பழிக்கு பழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

இஸ்ரேலுக்குள் பாரசூட் மூலமாக நுழையும் ஹமாஸ் படையினர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவில் ஒரு கட்டிடத்தில் அரேபிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது வைரல் வீடியோ எகிப்தை சேர்ந்தது என்பதை நம்மால் அறிய முடிந்தது. பல்வேறு நபர்கள் இதனை வைரல் போஸ்ட்களின் கீழே சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும், எகிப்து ராணுவ அகாடமியினர் பயிற்சி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் கட்டிடம் மற்றும் எகிப்து ராணுவ அகாடமியின் முன்புறத்தோற்றம் ஆகியவற்றின் மூலமாக உறுதியாகிறது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலமாக இதனை நாம் உறுதி செய்து கொண்டோம். வைரலாகும் வீடியோ இதன்மூலமாக எகிப்தை சேர்ந்தது என்பது உறுதியாகிறது.

இஸ்ரேலுக்குள்

Also Read: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

Conclusion

இஸ்ரேலுக்குள் பாரசூட் மூலமாக நுழையும் ஹமாஸ் படையினர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Google Street View Map

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular