Fact Check
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையானதா?
Claim: வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல்
Fact: வைரலாகும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். அவ்வீடியோவில் காணப்படுவது தேர்தல் முடிவுகள் அறிவித்தப்பின் வாக்கு சீட்டுகளை VVPAT இயந்திரங்களிலிருந்து எடுத்து, அந்த இயந்திரங்களை சீல் செய்து வைக்கும் வழக்கமான நிகழ்வாகும்
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அந்த வீடியோவில் சிலர் VVPAT இயந்திரங்களை கழற்றி உள்ளே இருக்கும் சீட்டுகளை வெளியே எடுப்பதை காண முடிந்தது.

