Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக – பிபிசி கருத்துக்கணிப்பு
Fact: வைரலாகும் சர்வே பிபிசி தரப்பில் வெளியிடப்பட்டது அல்ல; போலியானது.
கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக என்று பிபிசி சர்வே ஒன்று வெளியிட்டதாக தகவல் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
”கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி நான் சொல்லவில்லை பிபிசி சர்வே சொல்லுகிறது” என்று இந்த தகவல் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: VIP Bags மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டதா?
Factcheck / Verification
கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக என்று பிபிசி சர்வே ஒன்று வெளியிட்டதாக தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகிய சர்வே குறித்து ஆராய்ந்தபோது அதில் பல்வேறு எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் இருப்பது நமக்குத் தெரிய வந்தது. மேலும், அதில் இடங்களில் மும்பை கர்நாடகா மற்றும் ஹைதராபாத் கர்நாடகா என்று கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை கிட்டூர் கர்நாடகா மற்றும் கல்யாண கர்நாடகா என்று மாநில அரசால் எப்போதே பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது.
குறிப்பிட்ட பதிவில் இடம்பெற்றிருந்த பிபிசி லிங்கை க்ளிக் செய்து உள்ளே சென்றால் அது கர்நாடகா தொடர்பான செய்திகளைக் காட்டியதே தவிர வைரல் பதிவில் உள்ளது போன்று பிபிசி சர்வே பக்கத்திற்கு எடுத்துச்செல்லவில்லை. அப்படி எந்த சர்வேயும் கர்நாடக செய்திகள் பக்கத்தில் பிபிசியில் காணக்கிடைக்கவில்லை.
பிபிசி ஆங்கிலத்திலும் கர்நாடகா தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகளோ, சர்வே முடிவுகளோ இல்லை. பிபிசியின் சமூக வலைத்தளங்களிலும் கர்நாடகா தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு இடம்பெறவில்லை.
நம்முடைய தொடர் தேடலில், கடந்த மே 07, 2018ஆம் ஆண்டு அப்போதைய கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின்போது, இதேபோன்று ஒரு கருத்துக்கணிப்பு வைரலாகிய நிலையில், @BBCNewsPR, ”போலியான கருத்துக்கணிப்பு” என்று விளக்கமளித்துள்ளது. மேலும், இந்தியாவில் பிபிசி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு சர்வேக்களை நடத்துவதில்லை என்றும் அந்த பகிர்வில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மே 2018ல் BBC News Indiaவிலும் விளக்கம் இடம்பெற்றுள்ளது. அதில், “A fake survey on Karnataka polls has been circulating on WhatsApp and claims to be from BBC News. We’d like to make absolutely clear that it’s a #fake and does not come from the BBC. The BBC does not commission pre-election surveys in India. #fakenews.” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வைரலாகும் சர்வே மற்றும் 2018ல் வைரலான சர்வே முடிவுகள் பதிவிற்கும் அதில் உபயோகிக்கப்பட்டுள்ள குறிகள் உட்பட நிறைய ஒற்றுமைகள் இருப்பதை அறிய முடிந்தது.
இதுதொடர்பாக, பிபிசி தரப்பில் நியூஸ்செக்கர் சார்பில் விளக்கம் கேட்டுள்ளோம். விரைவில் அதற்கான முடிவுகளை இங்கே இணைக்கிறோம்.
Also Read: சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக பரவும் எடிட் வீடியோ!
Conclusion
கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக என்று பரவும் பிபிசி சர்வே போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Official Website Of BBC News Hindi
Official Website Of BBC
Tweet By @BBCNewsPR, Dated May 7, 2018
(இக்கட்டுரை NewsChecker ஆங்கிலத்தில் முதலில் வெளியாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.