உதயநிதி ஸ்டாலினை பெரியாருடன் ஒப்பிட்டு பத்திரிக்கையாளர் செந்தில் வேல் பதிவிட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கடந்த மே-20 ஆம் தேதியன்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் வெளியானது. இந்தியில் வெளியான ஆர்ட்டிக்கிள்-15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக் இந்த திரைப்படம்.
இந்நிலையில், “பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை. இன்று திரையில் காக்கிச்சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைக்காவியமாக நெஞ்சுக்கு நீதி இருக்கும். உலகளவில் பல்வேறு விருதுகளை உறுதியாக வெல்லும்” என்று பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறியதாகப் புகைப்படப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ட்விட்டரில் ட்ரெண்டான வணக்கம் மோடி என்று நியூஸ்கார்டு வெளியிட்டதா தந்தி டிவி?
Fact Check/Verification
உதயநிதி ஸ்டாலினை பெரியாருடன் ஒப்பிட்ட பத்திரிக்கையாளர் செந்தில் வேல் என்று பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட வைரல் பதிவு இடம்பெற்றிருந்த @Senthillvel79 என்கிற ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்தோம். பத்திரிக்கையாளர் செந்தில் வேலின் @senthilvel79 என்கிற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் போன்றே நகலாக இந்த போலிக்கணக்கை உருவாக்கியுள்ளனர். அதில் இருந்தே குறிப்பிட்ட வைரல் ட்விட் பரப்பப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, இதுகுறித்து பத்திரிக்கையாளர் செந்தில் வேலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “குறிப்பிட்ட ட்விட் போலியானது; அந்த ட்விட்டர் பக்கமும் போலியானது. @Senthilvel79 என்பதே என்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்” என்று விளக்கமளித்தார்.
Conclusion
உதயநிதி ஸ்டாலினை பெரியாருடன் ஒப்பிட்ட பத்திரிக்கையாளர் செந்தில் வேல் என்று பரவுகின்ற செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated Content/False
Our Sources
Senthil Vel Official Twitter page
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)