வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact Checkநடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று பரவும் நையாண்டி நியூஸ்கார்ட்!

நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று பரவும் நையாண்டி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று சன் நியூஸ் செய்தி

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் ஒரு நையாண்டி பதிவாகும்.

நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“ரஜினி வீட்டில் நடிகர் விஜய். சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நடிகர் விஜய் வருகை ரஜினிகாந்த் வீட்டு சமையல் அறையில் உளுந்த வடை சுடுவதால் மோப்பம் பிடித்து பறந்து வந்தேன் என விஜய் தகவல்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot from Twitter/@ArunjAk_

Archived Link

Screenshot from Facebook/tamizhandaaamemes

Facebook Link

Screenshot from Facebook/ravik.rajini.92

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்றாரா செல்லூர் ராஜூ?

Fact Check/Verification

நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் சன் நியூஸ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.

ஆனால், அவ்வாறு எந்த நியூஸ்கார்டும் வெளியாகியிருக்கவில்லை. மேலும், வைரலாகும் நியூஸ்கார்டில் நடிகர் விஜய்-ஐ காக்கையுடன் ஒப்பிட்டு நையாண்டியான வகையில் செய்தி பதிவாகியிருந்தது.

Sample News Card
Fake News card

எனவே, இதுகுறித்து நாம் சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவுகிறது; அதனை நாங்கள் வெளியிடவில்லை. நையாண்டியான வகையில் குறிப்பிட்ட செய்தியை பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார்.

Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?

Conclusion

நடிகர் ரஜினி வீட்டில் நடிகர் விஜய் என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் ஒரு நையாண்டிப் பதிவு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Satire

Our Sources
Phone Conversation with Manoj, Sun News Digital Head, Dated August 02, 2023

Facebook Post From, Sun News Tamil, Dated July 31, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular